2026: ஜூன் 2 ஆம் தேதி நடக்கும் குரு பெயர்ச்சி.. 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்ட மழை?
ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமானதாக பார்க்கபடுகிறார். குரு பகவான் ஒருவருக்கு சுபமாக அமைந்து விட்டால் அதன் ராசியினர் அறிவிலும் ஞானத்திலும் செல்வத்திலும் சிறந்து விளங்குவார்.
அப்படியாக ஜூன் இரண்டாம் தேதி குரு பகவான் உடைய உச்ச ராசியான கடக ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் 12 ராசிகளில் எந்த ராசியில் இருக்க மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் மழை காத்திருக்கிறது என்று பார்ப்போம்.
மேஷம்:
இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வீடு வண்டி வாகனமாக கூடிய யோகம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் இவர்களுக்கு உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்:
இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் பொருளாதாரத்தில் சந்தித்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய பேச்சுதிறனால் வேலையை நினைத்தது போல் சாதித்துக்கொள்வீர்கள்.
கடகம்:
இவர்கள் ராசியில் தான் குரு பகவான் உச்சம் அடைகிறார். அதனால் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி இருக்கும். எதையும் துணிந்து சாதித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும் கடன் தொல்லை விலகும்.
சிம்மம்:
நீண்ட நாள் பொருளாதார பிரச்சனைகள் இருந்து விடுபடுவீர்கள். ஒரு இடத்தை வாங்கவும் விற்கவும் சிரமப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் சுலபமாக முடியும். அரசியல் தொடர்பான விஷயங்கள் லாபத்தை கொடுக்கும்.
கன்னி:
இவர்களுக்கு குடும்பத்தில் பேச்சுக்களால் மதிப்பு அதிகரிக்கும். பண விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சேமிப்பு அதிகரித்தாலும் வீண் செலவுகளை தவிர்த்தால் நன்மை உண்டாகும்.
துலாம்:
சமுதாயத்திலும் வேலையிலும் நிறைய பொறுப்புகளும் சவால்களும் இருந்தாலும் அதையெல்லாம் தகர்த்து நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். பணவரவால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |