செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!
நவகிரங்களின் நிலையான ராசி பலன் கணிப்பில் முக்கிய இடம் வகிப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
கிரகங்களின் இடமாற்றம் மற்றும் கிரகங்களின் நேர்ககையால் உருவாகும் ராஜ யோகங்கள் 12 ராசிகளின் வாழ்ககையிலும் மாற்றத்தை ஏற்ப்படுத்தும்.

அந்தவகையில், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக அறியப்படும் செவ்வாய், ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
தற்போது செவ்வாய் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 11 ஆம் திகதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.
இந்த பெயர்ச்சியால் ஆற்றல் வாய்ந்த ருச்சக ராஜயோகம் உருவாவதோடு, சில ராசிகளில் விபரீத ராஜயோகமும் உருவாகவுள்ளது. அதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருந்தாலும் பொருளாதார ரீதியில் உச்ச பலனை பெறும் ராசிகள் குறித்து இந்த இங்கு பாரை்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்கவுள்ளதால், இவர்களின் தொழில் வாழ்கையில் சிறப்பான முன்னேற்றத்தை எதிர்ப்பார்க்கலாம்.
நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும். அதிகளில் பணத்தை செலவு செய்தாலும் குறிப்பிட்ட தொகையை சேமிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி

கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்குவதால் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டுமே சிறப்பாக இருக்கும்.
குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுப்படுபவர்களுக்கு உச்சகட்ட லாபம் கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். தொட்டதெல்லாம் வெற்றியாகும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்குவதால், இவர்களின் நீண்ட கால இலக்குகளை இந்த காலகட்டத்தில் அடைய முடியும்.
கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும்.