2026 குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு 10-ல் குரு இருப்பதால் பதவி பறிப்போகுமா?

By Sakthi Raj Jun 07, 2026 01:00 PM GMT
Report

எல்லோரையும் சமமாக பார்ப்பதிலும் எல்லோரையும் சமமாக நேசிப்பதிலும் துலாம் ராசியினர் சிறந்து விளங்குகிறார்கள் அப்படியாக, ஜூன் இரண்டாம் தேதி குரு பகவான் துலாம் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு வருகிறார்.

இதனால் இவர்களுக்கு பதவி பறிபோகும் என்கின்ற பயம் பதட்டம் இருக்கிறது. அதனால் துலாம் ராசியினருக்கு குரு பெயர்ச்சியினால் பத்தில் இருக்கக்கூடிய குரு பதவியை பறிப்பாரா? என்பதை பற்றி பார்ப்போம்.

2026 குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு 10-ல் குரு இருப்பதால் பதவி பறிப்போகுமா? | 2026 Guru Peyarchi Prediction For Libra Zodiac

2026 ஜூன்: குபேர யோகத்தை பெரும் முக்கிய ராசிகள் யார் ?

2026 ஜூன்: குபேர யோகத்தை பெரும் முக்கிய ராசிகள் யார் ?

குரு பகவானின் பார்வை பலன்கள்:

குரு பகவான் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கம்பீரமாக பேசுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். மனதிற்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். இருப்பினும் நீங்கள் வீண் சந்தேகத்தை விட்டு விட்டால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். நீண்ட நாட்கள் கைகளுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.

மேலும் குருபகவான் சுக வீட்டை பார்ப்பதால் தாயார் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய் வழியில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். சிலருக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அதே போல், குருபகவான் ஆறாம் வீட்டில் பார்ப்பதால் திடீர் பண வரவு உண்டு. பழைய கடனை அடைப்பீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.

2026 குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு 10-ல் குரு இருப்பதால் பதவி பறிப்போகுமா? | 2026 Guru Peyarchi Prediction For Libra Zodiac

வாழ்க்கையில் வெற்றியும் மன வலியையும் கொடுக்கும் சக்தி வாய்ந்த அனுமன் மந்திரம்

வாழ்க்கையில் வெற்றியும் மன வலியையும் கொடுக்கும் சக்தி வாய்ந்த அனுமன் மந்திரம்

மேலும், குரு பகவான் இவர்களுக்கு பத்தாம் இடத்தில் வருவதால் முன்பை விட அதிகமாக நீங்கள் வேலை செய்ய நேரலாம், வேலையில் புதிய யுத்திகளை கடைப்பிடித்து நீங்கள் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்வீர்கள்,

அதை போல் மேலதிகாரிகளை பற்றி தேவை இல்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம், உங்களுக்கு கொடுத்த வேலையை நீங்கள் சரியாக செய்து முடித்தாலே நல்ல பலன்கள் தேடி வரும், சக ஊழியர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பு உயரக்கூடிய நிலை இருந்தாலும் அளவாக பேசி பழகுவது அவசியம். ஆக, துலாம் ராசியினர் இந்த குரு பெயர்ச்சி பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். புதிய விஷயங்கள் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வர போகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US