2026 ஜனவரி 4 நடக்கும் புதன் பெயர்ச்சி: பேச்சு திறனால் சாதிக்க போகும் 4 ராசிகள்
2026 ஆம் ஆண்டு கிரகங்கள் பல முக்கிய நிகழ்வுகளை நடத்த உள்ளது. அப்படியாக புது வருடத்தில் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் ஒரு முக்கிய பெயர்ச்சி நடக்கிறது. அதாவது இந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி புதன் விருச்சிக ராசியில் இருந்து பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு செல்கிறார்.
இதனால் கட்டாயம் 12 ராசிகளுக்கும் ஒரு நல்ல மாற்றங்களையும் திருப்புமுனைகளையும் கொடுக்கப் போகிறது. குறிப்பாக ஒரு சிலருக்கு எதிர்பாராத மாற்றங்கள் வேலையில் நடக்க இருக்கிறது. அப்படியாக எந்த ராசியினருக்கு புதன் பெயர்ச்சியினால் அமோகமான வாழ்க்கை காத்திருக்கிறது என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு புதன் பெயர்ச்சி மிகவும் சாதகமாகவே இருக்கிறது. திடீரென்று இவர்களை அழைத்து உயர் அதிகாரிகள் ஒரு கூடுதல் பொறுப்பை கொடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டமான வாய்ப்புகள் காத்திருக்கிறது. எதிர்பாராத விதமாக பொருளாதாரம் மிகச்சிறந்த நிலையில் அமையப்போகிறது.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு புதன் பெயர்ச்சியானது இவர்களுடைய ஆரோக்கியத்தில் சந்தித்து வந்த கஷ்டங்களை எல்லாம் சரி செய்யப்போகிறது. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்கின்ற யோகம் கிடைக்கும். மன ரீதியாக ஒரு நல்ல நேர்மறை மாற்றங்களை பார்ப்பீர்கள். இனிமையாக பேசி எதையும் சாதிக்க கூடிய காலம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியானது வீடுகளில் ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையை கொடுக்கப் போகிறது. உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி மகிழ்ச்சியான நேரத்தை செலவிடப் போகிறார்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய பேச்சுத் திறமையால் பாராட்டுகளை பெற போகிறீர்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியானது இவர்களை ஒரு கலகலப்பான ஒரு சூழ்நிலையில் வைக்கப் போகிறது. கவலைகள் எல்லாம் மறந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பேசி சிரித்து இவர்களுடைய நாட்களை செலவிடப் போகிறார்கள். ஒரு சிலருக்கு புதிய நட்பு வட்டாரம் அறிமுகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |