2026 ஜெய ஏகாதசி: துளசி செடி வைத்திருப்பவர்கள் இந்த தவறை செய்து விடாதீர்கள்
இந்து மதத்தில் விரதங்களில் மிகச்சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த விரதங்களாக ஏகாதசி விரதம் இருக்கிறது. இந்த விரதம் மாதத்திற்கு இரண்டு முறை வருகிறது. அதாவது கிருஷ்ண பட்சத்தில் ஒரு முறையும், சுக்ல பட்சத்தில் ஒரு முறையும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த இரண்டு நாளும் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்து அவருடைய அருளையும் அவர் மார்பில் குடிக்கொண்டிருக்கின்ற மகாலட்சுமி தேவியின் அருளையும் பெறுவதற்கு மிகச்சிறந்த நாளாக இருக்கிறது. ஆதலால் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் ஒருவருடைய பாவம் விலகி புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜெய ஏகாதசி ஜனவரி 29ஆம் தேதி அன்று வருகிறது. இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் விரதமிருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

அப்படியாக இந்த தினத்தில் குறிப்பிட்ட சில விஷயங்கள் செய்வதை நாம் தவிர்க்க வேண்டுமாம். அதை பற்றி பார்ப்போம்.
ஜெய ஏகாதசி நாளில் துளசி தேவி தண்ணீர் இல்லாமல் விரதம் இருப்பதாக ஐதீகம். ஏகாதசி நாளில் துளசி தேவைக்கு தண்ணீர் படைப்பது போன்ற விஷயங்கள் அவர்களுடைய விரதத்தை முறிப்பதற்கு சமம் என்று சொல்கிறார்கள் ஆக அதை தவிர்த்து விடுங்கள்.
மேலும், ஏகாதசி நாளில் நாம் துளசி இலைகளை பறிப்பதை தவிர்த்து விட வேண்டும். மீறினால் நமக்கு கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் துளசி தேவியை மறவாமல் வழிபாடு செய்வது நமக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மேலும் நம்முடைய வீடுகளில் துளசி செடிக்கு அருகில் காலணிகள் போன்றவற்றை கழட்டி வைப்பது தவிர்த்து விட வேண்டும். துளசி செடிக்கு அருகில் நாம் எப்பொழுதும் சுத்தமான ஒரு சூழ்நிலையை கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மகாலட்சுமி தேவி மனம் குளிர்ந்து நமக்கு அருள் புரிவார்.
அதேபோல் ஏகாதசி நாட்களில் மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி துளசி தேவியை வழிபாடு செய்தால் நிச்சயம் நம் வீட்டிற்கு ஒரு நல்ல நேர்மறை ஆற்றல் பெருகும். ஆக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல திருப்பம் வேண்டும் என்றால் நிச்சயமாக ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபாட்டு செய்யுங்கள் நல்ல மாற்றம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |