2026 ஜூலை: துலாம் ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

By Sakthi Raj Jun 23, 2026 05:59 AM GMT
Report

ஜோதிடத்தில் துலாம் ராசிக்கு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி பார்ப்போம். ஜூலை மாதம் இவர்களுக்கு வேலையில் சில சவால்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் சவால்களை சந்தித்தாலும் இவர்கள் பொருளாதார ரீதியாக வாழ்க்கை தரத்தில் எந்த ஒரு பின்னடையும் இல்லை.

வேலை விஷயங்களில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியை கையாள்வது அவசியம். மேலும், ஒன்பதாம் இடத்திற்கு உடைய புதன் பகவான் ஆட்சி பெறுவதால் பெரிய சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு கடவுள் அருளால் காப்பாற்றப்படுவீர்கள்.

மேலும், எட்டாம் இடத்திற்கு செவ்வாய் இருப்பதால் மனைவியின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் வீடுகளில் மகாலட்சுமியின் அருள் இருப்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்

உங்கள் வீடுகளில் மகாலட்சுமியின் அருள் இருப்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்

குடும்பங்களில் தேவையில்லாத குழப்பங்களும் மன கசப்புகளும் வரலாம். ஐந்தாம் இடத்திற்கு உடைய சனிபகவான் வக்கிரமடைவதால் குழந்தை பாக்கியம் தொடர்பான முயற்சி செய்பவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

மேலும், இவர்கள் 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பத்தாம் இடத்தில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் தந்தையுடன் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் வரலாம். கவனமாக கையாள்வது அவசியம். நீங்கள் இந்த காலகட்டங்களில் சூரிய பகவான் வழிபாடு செய்வது சிறப்பு பலன்களை கொடுக்கும்.

குறிப்பாக ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை நீங்கள் கேட்பது மிகச் சிறந்த நன்மையை கொடுக்க போகிறது. ஜூலை 10, 11, 12 ஆகிய நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த காலகட்டங்களில் பச்சை நிறத்தை நீங்கள் அணியும் பொழுது மிகச் சிறந்த பலனை பெறலாம். மேலும், துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் எப்படி இருக்க போகிறது? என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US