2026: கொட்டி கொடுக்க வரும் சனி பகவான்.. கஷ்டத்தில் இருந்து விடுதலை பெறும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு கால நேரத்தில் தங்களுடைய இடத்தை மாற்றுவார்கள். அந்த வகையில், சனி பகவான் ஜூலை மாதம் இறுதியில் அவருடைய வக்கிர பயணத்தை தொடங்குகிறார்.
டிசம்பர் 11 வரை 140 நாட்கள் வக்ர நிலையிலேயே பயணிக்கிறார். டிசம்பர் 11 அவர் இயல்பு நிலைக்கு திரும்பும் பொழுது சுமார் 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் திடீர் மாற்றம் நடக்கும். நீண்ட நாள் துன்பத்திலிருந்து அவர்கள் விடுதலை பெறப்போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
சனி பகவான் இயல்பு நிலைக்கு திரும்பும் பொழுது ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். இவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத அளவிற்கு புதிய திருப்பங்கள் நடைபெறும்.
நீண்ட நாட்களாக வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பிரிந்த வாழ்ந்த கணவன் மனைவி இடையே ஒரு நல்ல புரிதல் உண்டாகும்.
விருச்சிகம்:
சனிபகவானுடைய இந்த மாற்றம் விருச்சிக ராசியினருக்கு வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. எடுக்கும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
நீண்ட நாட்கள் உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தால் அதிலிருந்து விடுபடுவீர்கள். அடுத்து ஒரு வருடம் உங்களுக்கு சாதகமான பலன்களை கிடைக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மகிழ்ச்சியானதாகவும் குடும்பத்தில் ஒரு முன்னேற்றமும் ஒற்றுமையையும் கொடுக்கக்கூடிய காலகட்டமாகும். வேலையில் உங்களுக்கு எதிர்மறை ஆற்றல்கள் விலகி நல்ல சூழ்நிலை உருவாகும்.
வீடு வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உயர்ந்த பதிவுகள் கைகளுக்கு தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |