2026: நடக்கும் குரு பெயர்ச்சியால் கொடிக்கட்டி பறக்கப்போகும் ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்கிறது. அதில் குறிப்பிட்டு சில கிரக பெயர்ச்சி மிகப்பெரிய அளவில் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில் குரு பகவான் அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு ஜூன் மாதம் இடமாகிறார். இதனால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட சில ராசியினர் மிகப்பெரிய அளவில் யோகத்தை பெறப்போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. குருபகவான் மிதுன ராசியில் செல்வத்தை குறிக்கும் வீட்டில் சஞ்சரிப்பதால் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் எதிர்பார்த்த வருமானம் கைகளுக்கு வரும்.
வியாபாரத்தில் முதலீடுகள் செய்திருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்க போகிறீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் மற்ற ராசிகளுக்கு கிடைக்க கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை விடவும் இவர்களுக்கு அதிக அளவில் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. இவர்கள் வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும்.
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த விஷயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நல்ல முடிவை அடையும். நீண்ட நாட்கள் மனதில் இருந்து வந்த கனவுகளும் ஆசைகளும் நிறைவேற கூடிய அற்புதமான காலகட்டமாகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் உருவாகக்கூடிய இந்த ஹன்ஸ் ராஜயோகம் இவர்களுக்கு குடும்பம் மற்றும் பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியை கொடுக்கப்பபோகிறது. குடும்ப உறவுகளில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகும். விவாகரத்து வரை சென்ற தம்பதியினர் கூட இந்த காலகட்டங்களில் ஒன்று இணைய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |