2026: இன்று ஆனி பௌர்ணமி.. வீடுகளில் என்ன செய்யலாம் ?என்ன செய்யக்கூடாது?
இந்து மதத்தில் அமாவாசை முன்னோர்களுடைய வழிபாட்டிற்கு மிக உகந்த நாளாக இருக்கிறது. அப்படியாக, பௌர்ணமி தினமானது தெய்வ வழிபாட்டிற்கு மிக உகந்த தினமாக கருதப்படுகிறது.
இந்த நாளில் தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்து காணப்படும் நாள் என்பதால் இந்த நாளில் செய்யக்கூடிய பெண் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு ஆகியவை சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
இவ்வளவு தெய்வீக ஆற்றல் நிறைந்த பௌர்ணமி தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது என்பதை பற்றியும் பார்ப்போம்.
பௌர்ணமி என்பது சந்திரனுக்கு உரிய நாளாகும்.ஜோதிடத்தில், சந்திரன் தான் ஒருவருடைய மனதிற்கு காரணமாக இருக்கிறார். இவர் தான் தாயை குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார். அதனால் இந்த நாளில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்றும் சில விஷயங்களை செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பெளர்ணமி அன்று செய்ய வேண்டியவை :
இந்த நாளில் கட்டாயமாக சந்திர தரிசனம் செய்ய வேண்டும். நில ஒளியில் 10 முதல் 15 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யும் பொழுது மனதில் தெளிவும் நிதானமும் பிறக்கும். அதே போல் வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நில ஒளிபட்ட பிறகு மறுநாள் துளசி செடிக்கு ஊற்றி வாருங்கள்.
இது எதிர்மறை ஆற்றல்களை குறைக்கக்கூடிய சக்தி கொண்டது. இந்த நாளில் மந்திரங்களை ஜெபிப்பது மிகச்சிறந்த பலனை கொடுக்கும். வீட்டில் வடகிழக்கு பகுதியில் ஒரு நெய் தீபம் ஏற்றி வையுங்கள். இதனால் நம்முடைய வீட்டில் ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும்.
இந்த நாளில் விரதம் இருந்து இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வழிபாடு செய்வது நினைத்த காரியத்தை முடிப்பதற்கும் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும்.
இந்த நாளில் மனதார ஒருவருக்கு உதவி செய்வது என்பது பல நன்மைகளையும் புண்ணியத்தையும் சேர்க்கும்.

பெளர்ணமி நாளில் செய்யக் கூடாதவை :
பௌர்ணமி நாளான இன்று கட்டாயமாக மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக்கூடாது. இரவு நேரங்களில் சண்டையிடுவது, கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.
பூஜை அறையில் கட்டாயமாக சுத்தம் செய்திருக்க வேண்டும். இன்றைய நாள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல், புதிய தொழில் தொடங்குதல் நீண்ட தூர பயணம் ஆகியவற்றை தள்ளிப் போடுவதும் சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |