2026 தீபாவளி: நினைத்தது நிறைவேற பாராயணம் செய்யவேண்டிய லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்

By Sakthi Raj Nov 07, 2026 12:17 PM GMT
Report

 ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு ஆசைகள் இருக்கும். அது சில நேரங்களில் நிறைவேறுகிறது. சில நேரங்களில் நிறைவேற கால தாமதமாக ஆகிறது.

அந்த காலகட்டங்களில் மனம் தளராமல் அந்த ஆசைக்காக தொடர்ந்து கடின உழைப்பையும், தொடர்ந்து இறைவழிபாடும் மேற்கொள்கின்ற பொழுது நிச்சயம் நாம் நினைத்ததை ஒரு நாள் விடாமுயற்சியால் அடைந்து விட முடியும்.

அப்படியாக, நாளைய தினம் மிக சிறப்பாக கொண்டாட காத்திருக்கக்கூடிய தீபாவளி திருநாள் பண்டிகை முன்னிட்டு லட்சுமி நரசிம்மர் உடைய அருளை பெறுவதற்கும் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கும் பாராயணம் செய்ய வேண்டிய லட்சுமி நரசிம்ம ஸ்லோகம் பற்றி பார்ப்போம்.

2026 தீபாவளி: நினைத்தது நிறைவேற பாராயணம் செய்யவேண்டிய லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம் | 2026 Lakshmi Narasimha Slokam To Chant On Diwali

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க சரியான நேரம் எது?

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க சரியான நேரம் எது?

லட்சுமி நரசிம்ம ஸ்லோகம் :

"யஸ்ய அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து,
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்,
ஸ்தம்பே அவதாரம் தம் அநந்ய லப்யம்,
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே."

தீபாவளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? சிறப்பான பாரம்பரியங்கள்

தீபாவளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? சிறப்பான பாரம்பரியங்கள்

பொருள்:

பக்தர்களுடைய துன்பங்களை நீக்குவதற்காக உடனடியாக தூணில் இருந்து அபதரித்த நரசிம்ம பெருமாளே! தாயின் கருவில் இருந்து பிறந்து வந்தால் கால தாமதமாகும் என்று தன்னுடைய பக்தனை காப்பாற்றுவதற்காக தூணில் இருந்து தோன்றியவனே!

அரிதாக அடையக்கூடிய தெய்வீகப் பேரருளை உடைய ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா பெருமாளே! உன்னுடைய திருவடிகளை நாங்கள் சரண் அடைகிறோம் என்பது ஆகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US