2026ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு நிச்சயம் - மாறும் கிரகநிலை
சில ராசிக்காரர்களுக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு பல கிரகங்கள் தங்களது நிலையை மாற்ற இருக்கின்றன. இந்த கிரக பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்க உள்ளது. குறிப்பாக சொந்த வீடு, புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

மேஷம்
உங்களின் கனவு இல்லத்தை வாங்குவதற்குத் தேவையான அளவு வருமானம் கிடைக்கும். பல ஆதாரங்களில் இருந்து பண வரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். சட்ட வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம்
நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. பூர்வீக சொத்துக்களும் உங்கள் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், தவறுதலான சொத்துக்களை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
துலாம்
வீடு, நிலம், புதிய வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். புதிய வீடு கட்டி பாதியிலேயே தடைபட்டு நின்றவர்கள் மீண்டும் வீட்டை கட்டி முடிப்பீர்கள். முதலீடுகள் அல்லது சொத்துக்கள் பெரிய லாபத்தைத் தரும்.
மகரம்
புதிய சொத்துக்கள் வாங்கவும், வீடு கட்டும் வாய்ப்புகளும் கிடைக்கும். நிலம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். கடந்த காலத்தில் ஏதேனும் சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் செய்து அது கைகூடாமல் இருந்தால் அந்தப் பிரச்சனைகள் தற்போது முடிவுக்கு வரும்.