2026 ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளும் நேரங்களும்

Report

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் மதுரையில் கோலாகலமாக இருக்கும். சித்திரை மாதம் மதுரையை சுற்றி எங்கிலும் திருவிழா கோலமாகவே காட்சி அளிக்கும். அதாவது மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருமண வைபவம் துவங்கி கள்ளழகர் ஆற்றல் இறங்கக்கூடிய வைபவம் வரை மிகச் சிறப்பாக ஒவ்வொரு விழாவும் கொண்டாடப்படுகிறது.

அப்படியாக 2026 ஆம் ஆண்டிற்கான மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளும் அதன் நேரங்கள் பற்றியும் பார்ப்போம். வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி அன்று சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

2026 ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளும் நேரங்களும் | 2026 Madurai Chithirai Festival Date Timings

2026: நாளை சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம்.. சிவன் அருள் பெற செய்யவேண்டியவை

2026: நாளை சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம்.. சிவன் அருள் பெற செய்யவேண்டியவை

அதை தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

பிறகு ஏப்ரல் 27 திங்கட்கிழமை அன்று மீனாட்சி அம்மன் திக் விஜயம் நிகழ்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மீனாட்சியம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

அடுத்த நாள் ஏப்ரல் 29 புதன்கிழமை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். அன்று மாலை கள்ளழகர் கோவிலில் இருந்து 6.00 முதல் 6.15 மணிக்குள் மதுரையை நோக்கி புறப்பாடு சிறப்பாக நடைபெறும். அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 30 வியாழக்கிழமை அன்று எதிர்சேவை நடைபெறும்.

அன்றைய நாள் மதுரை எல்லையான காலையில் 3 மூன்றுமாவடியிலும், மாலையில் தல்லாகுளத்திலும் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கக் கூடிய நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சிகர நிகழ்ச்சியாக மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க கூடிய அந்த வைபவமான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள கூடிய நிகழ்வு நடக்கும்.

அதற்கு மறுநாள் மே இரண்டாம் தேதி சனிக்கிழமை பெருமாளின் தசாவதார காட்சிகளுடன் ராமராஜர் மண்டபத்தில் இரவு முழுவதும் நடைபெறும். அதனை தொடர்ந்து மே நான்காம் தேதி திங்கட்கிழமை புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் மலைக்குத் திரும்புதல் நிகழ்வுவது சிறப்பாக நடைபெறும்.

2026 ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளும் நேரங்களும் | 2026 Madurai Chithirai Festival Date Timings

2026: சித்திரை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள்

2026: சித்திரை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள்

மேலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கக்கூடிய நாளான மே ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றல் எழுந்தருளுகிறார். இந்த அற்புதமான நிகழ்ச்சிக்காக மதுரை மாவட்டமே கண் விழித்து காத்திருப்பார்கள்.

மதுரையை மட்டுமல்லாமல் உலகையே காக்கக்கூடிய தாய் மீனாட்சி அம்மனுடைய திருக்கல்யாணத்தை காண்பது நமக்கு கோடான கோடி புண்ணியத்தை கொடுப்பதோடு பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியத்தையும் திருமண யோகத்தையும் கொடுக்கிறாள்.

பக்தர்கள் மீனாட்சியம்மன் ஆலயம் சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் தங்களுடைய வீடுகளிலே அமர்ந்து நடக்கக்கூடிய அற்புதமான காட்சிகளை கண்டு களித்து மீனாட்சி அம்மன் திருமண வைபவம் நேரம் தங்களுடைய தாலி சரடுகளை மாற்றி கொள்ளக்கூடிய நிகழ்வும் அன்றைய நாள் மிகச் சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US