2026 மகாசிவராத்திரி: சிவபெருமான் அருளால் அதிர்ஷ்டம் பெரும் 3 ராசிகள்

By Sakthi Raj Feb 08, 2026 07:00 AM GMT
Report

மகா சிவராத்திரி என்பது சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய முக்கிய நாளாகும். அப்படியாக, இந்த 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு சிவராத்திரி துவங்கி பிப்ரவரி 16 மாலை 5. 34 மணி வரை உள்ளது.

அன்றைய தினம் செவ்வாய் மற்றும் சந்திர பகவான் சேர்க்கையால் மகாலட்சுமி யோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகமானது சிவபெருமான் அருளோடு சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கொடுக்க இருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 மகாசிவராத்திரி: சிவபெருமான் அருளால் அதிர்ஷ்டம் பெரும் 3 ராசிகள் | 2026 Mahasivarathiri Brings Luck To This 3 Zodiac

கருப்பு நிற ஆடையை இந்த நேரங்களில் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமாம்

கருப்பு நிற ஆடையை இந்த நேரங்களில் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமாம்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக அமையப்போகிறது. தொழில் ரீதியாக இவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் மற்றும் வருமான ரீதியாக இவர்கள் மிகப்பெரிய அளவில் உயரத்தை தொட போகிறார்கள்.

நீண்ட நாட்களாக கடன் தொல்லையில் இருந்து வருபவர்களுக்கு இந்த சிவராத்திரி முதல் அந்த கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் இரட்டுக்கு பலன்களை நீங்கள் பெறலாம்.

கன்னி:

கன்னி ராசியினருக்கு இந்த மகா சிவராத்திரி என்பது மன மகிழ்ச்சியை கொடுக்க போகிறது. இவர்களுக்கு நீண்ட நாட்கள் வாழ்க்கையில் இருந்து வந்த கஷ்டங்கள் விலகப் போகிறது. புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டாகும்.

அரசு வழியே நீங்கள் மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற போகிறீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைகூடி வரப்போகிறது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். மேலும் நீங்கள் மனதில் அவ்வப்போது தோன்றும் குழப்பங்கள் விலக சிவபெருமானுக்கு கோதுமை கலந்த நெய்வேத்தியம் படைத்தால் நல்ல பலன் உண்டு.

ஆன்மீகம்: தவறியும் இந்த நாட்களில் இதை செய்யாதீர்கள்.. இழப்பு நிச்சயம்

ஆன்மீகம்: தவறியும் இந்த நாட்களில் இதை செய்யாதீர்கள்.. இழப்பு நிச்சயம்

கும்பம்:

கும்ப ராசியினருக்கு இந்த மகா சிவராத்திரி என்பதுமிகவும் சுபமான நாளாக அமையப்போகிறது. இவர்களுடைய கர்ம வினைகளில் இருந்து விலகக்கூட காலம். குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்க போகிறது. குடும்பத்தினருடைய முழு ஆதரவையும் பெறப்போகிறீர்கள்.

சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய காலமாகும். நீங்கள் நினைத்த இடத்தில் வேலை மாற்றம் கிடைக்கும். நீங்கள் இரவு நான்கு கால பூஜையில் கலந்து கொண்டு "ஓம் நமச்சிவாய" என்ற மந்திரத்தை இந்த மகா சிவராத்திரி அன்று உச்சரிப்பதால் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US