2026: நாளை வக்ர நிவர்த்தி ஆகும் புதன்.. யோகம் பெறப்போகும் முக்கிய ராசிகள்
ஜோதிடத்தில் புதன் பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். அதாவது புதன் பகவான் தான் எழுத்து, கணக்கு போன்றவற்றுக்கு காரணியாக இருக்கிறார். அப்படியாக புதன் பகவான் கடந்த 2026 பிப்ரவரி 3ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சஞ்சாரம் செய்தார்.
அவர் தற்பொழுது மார்ச் 21ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். மொத்தம் 23 நாட்கள் வக்ர நிலையில் புதன் பகவான் பயணம் செய்வார். இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அதிலும் குறிப்பாக ஒரு சில ராசிக்கு மிகப்பெரிய அளவில் ராஜயோகம் காத்திருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பகவானின் இந்த வக்ர நிவர்த்தி ஆனது இவர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு துறையில் வெற்றிகளை தேடி கொடுக்க போகிறது. கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை இவர்கள் இந்த காலகட்டம் பெற போகிறார்கள். குடும்ப உறவினர்கள் இடையே ஒற்றுமை உண்டாகும். எதிர்காலத்திற்கு தேவையான முக்கியமான விஷயங்களை செய்துக் கொள்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி இவர்களுக்கு தொழில் ரீதியாக மிக பெரிய மாறுதலை கொடுக்க போகிறது. வியாபாரம் நல்ல செழிப்பாக வளரக்கூடிய காலம் ஆகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். வழக்கு விஷயங்களில் எதையும் வாதாடி வெல்லக் கூடிய யோகம் பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி இவர்களுக்கு குடும்பத்தில் அத்தை வழி உறவுகளிடம் ஏற்பட்ட மன கசப்பை போக்கப்போகிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்கள் எதிலும் வெற்றி பெறப்போகிறார்கள். சிலருக்கு காதல் வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும் காலம் ஆகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி இவர்களுக்கு கலை துறையில் மிக பெரிய அளவில் பெயரும் புகழையும் பெற்றுக் கொடுக்கப்போகிறது. பொருளாதார விஷயங்களில் இருந்து வந்த பின்னடைவுகள் விலகும். சினமா துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் நிறைய எதிர்ப்பாராத வாய்ப்புகள் தேடி வரப்போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |