குரு பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் சூரிய பகவான்.. அதிரடி மாற்றம் சந்திக்கும் ராசிகள்

Report

 ஜோதிடத்தில் இரு கிரகங்கள் சேர்ந்து உருவாகக்கூடிய ராஜயோகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த வகையில் மார்ச் 15ஆம் தேதி குரு சூரியன் இணைந்து குரு ஆதித்த யோகம் உருவாக இருக்கிறது. இதனால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கம் உண்டாக்கி ஒரு நல்ல பலன்களை கொடுப்பதாக சொல்கிறார்கள்.அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

குரு பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் சூரிய பகவான்.. அதிரடி மாற்றம் சந்திக்கும் ராசிகள் | 2026 March Guru Aditya Yoga Prediction

2026: தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.. இந்த ஆண்டு எப்படி இருக்க போகிறது?

2026: தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.. இந்த ஆண்டு எப்படி இருக்க போகிறது?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இது மிக பெரிய யோகத்தை கொடுக்கும். மனதில் தன்னம்பிக்கையும் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தையும் கொடுக்கப்போகிறது. அரசு துறையில் இருந்து உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சமுதாயத்தில் உயர் பதவிகளில் இருக்கக்கூடிய நட்புகள் கிடைக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை இவர்களுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு நினைத்த பதவி உயர்வும் வேலையில் இவர்களுக்கு தொந்தரவு செய்தவர்களும் விலகிச் செல்வார்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை விலகும்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள கும்பகோணம் அத்திவரதர்

12 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள கும்பகோணம் அத்திவரதர்

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை அதிர்ஷ்ட கதவை திறக்க கூடியதாக இருக்கிறது. இந்த காலகட்டங்களில் ஒரு சிலர் தொலைதூர பயணம் மேற்கொண்டு நல்ல அனுகூலம் பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்பு தேடிவரும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனை விலகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை இவர்களுக்கு மிகச்சிறந்த நன்மையை கொடுக்க போகிறது. இவர்களுடைய ஆளுமை திறன் வெளிப்படும். குரு சூரியன் சேர்க்கை இவர்களுக்கு மன அமைதியையும் தெளிவையும் கொடுக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் விலகும். திருமண உறவில் மகிழ்ச்சி உண்டாகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US