2026 ராகு கேது பெயர்ச்சி: மார்ச் முதல் இவர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம்
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு மற்றும் கேது ஒருவர் ஜாதகத்தில் நிறைய தாக்கங்களை கொடுக்கக் கூடியவர். ராகு மற்றும் கேது அசுப கிரகமாக கருதப்பட்டாலும் பல நேரங்களில் இவர்கள் நமக்கு நன்மையை செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் மார்ச் 29ஆம் தேதி அன்று ராகு கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. அதாவது மார்ச் 29ஆம் தேதி கேது மகம் நட்சத்திரத்திலும், ராகு சதய நட்சத்திரத்திலும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த பெயிற்சியானது குறிப்பிட்ட நான்கு ராசிகாரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்ய போகிறது. அதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொண்டு சேர்க்க போகிறது. நினைத்த காரியத்தை நினைத்தது போல் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.
உடன் பிறந்தவர்களால் நல்ல ஆதரவு கிடைக்கும். வெளியிடங்களில் உங்களுக்கான மரியாதை அதிகரிப்பதோடு இழந்த அந்தஸ்தை மீட்டு பெறுவீர்கள். காதலர்களுக்கு வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி இவர்களுக்கு நீண்ட நாள் கடனில் இருந்து வெளிவர உதவப் போகிறது. சொத்து விஷயங்களில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். நீண்ட காலமாக செய்து முடிக்காத வேலையை நீங்கள் செய்து முடிப்பீர்கள்.
வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். குடும்பத்துடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக பங்கு கொள்வீர்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியானது ஒரு மிகச்சிறந்த நற்பலனை பெற்றுக் கொடுக்கப் போகிறது. உங்கள் கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். உங்கள் வருமானம் உயரும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
உயர் கல்வி படிக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |