2026-ல் இந்த 5 ராசிகளுக்கு திருமணம் நடந்தே தீரும் - நீங்க என்ன ராசி?
காதல், உறவுகள், செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றை குறிக்கும் சுக்கிர பகவான் 2026 ஆம் ஆண்டு பலமுறை தனது நிலையை மாற்ற இருக்கிறார்.
சுக்கிர பகவானின் இந்த பெயர்ச்சியானது பல ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்க உள்ளது. நீண்ட காலமாக திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

மேஷம்
மார்ச் மாதம் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். விரும்பிய வாழ்க்கை துணையை அடைவதற்கான யோகம் உருவாகும். படித்த, ஒழுக்கமுள்ள, புத்திசாலித்தனம் மிக்க துணையை திருமணம் செய்து கொள்வீர்கள்.
ரிஷபம்
திருமணம் குறித்த நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளும் ஒருவரை வாழ்க்கைத் துணையாக பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்
இதயம் விரும்பும் பொருத்தமான துணையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லும் நல்ல வாழ்க்கைத் துணை உங்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கும்.
துலாம்
இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க முடியும். பணக்கார மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த வாழ்க்கைத் துணையை மணக்க வாய்ப்பு உள்ளது.

மகரம்
திருமணம் குறித்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். சுக்கிரனின் சிறப்பு அருளால் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறுவீர்கள். நீங்கள் விரும்பும் நபரை அல்லது உங்களுக்கு பொருத்தமான துணையை கண்டறியும் வாய்ப்பு உள்ளது.