2026 சனி ஜெயந்தி: 300 ஆண்டுக்கு பிறகு நடக்க இருக்கும் அதிசயம்.. ராஜவாழ்க்கை யாருக்கு?
2026-ம் ஆண்டு மே 16ஆம் தேதி கொண்டாட்டக்கூடிய சனி ஜெயந்தி ஒரு சாதாரண பண்டிகையாக இல்லாமல் ஜோதிட கணக்குகளின் படி சுமார் 300 ஆண்டுக்குப் பிறகு வானியல் மாற்றத்தில் ஒரு அரிய சேர்க்கை நடைபெற இருக்கிறது.
இந்த அற்புதமான வானியல் நிகழ்வின் காரணமாக சனி ஜெயந்தி இந்த வருடம் முக்கிய வாய்ந்ததாகவும் இரு மடங்குகளாக நமக்கு பலன்களை கொடுக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படியாக, குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இது மிகப்பெரிய யோகத்தை வழங்கும்.
மேலும், ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த ஆண்டு சனி ஜெயந்தியில் 'சச மகாபுருஷ யோகம்', 'கஜ கேசரி யோகம்', 'புதாதித்ய யோகம்', 'சௌபாக்ய யோகம்' மற்றும் 'சோபன யோகம்' உள்ளிட்ட பல சக்திவாய்ந்த 'யோகங்கள்' (கோளச் சேர்க்கைகள்) நிகழ உள்ளது.
இது 300 நூற்றாண்டுகளுக்கு பிறகும் உருவாகும் ஐந்து தனித்துவமான யோகங்களின் சங்கமம் ஆகும். அப்படியாக எந்த ராசியினர் சனி ஜெயந்தி மிகப்பெரிய அளவில் ராஜயோகத்தை பெறப்போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு நீண்ட நாள் கைகளுக்கு வராத பொருளாதாரம் வந்து சேரும் உங்களின் தொழிலை விரிவாக்கம் செய்வதைப் பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கான மரியாதை வந்து சேரும். சிலருக்கு வீடு கட்ட வேண்டும் என்கின்ற யோகம் நிறைவேறும். புதிய சொத்துக்கள், வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகமும் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனி ஜெயந்தியில் கிரக மாற்றங்களால் இவர்களுக்கு வாழ்க்கையில் இதுவரை இவர்கள் நினைத்து பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் உயரத்தை தொட போகிறார்கள்.
தொழில் ரீதியாக இவர்கள் விரிவாக்கம் செய்வதை பற்றி ஆலோசனை செய்வார்கள். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு பொற்காலமாக அமையப் போகிறது. நினைத்த பொருளை வாங்கக்கூடிய யோகமும் ஆடம்பரமான வாழ்க்கையும் கிடைக்க பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியை முன்னிட்டு இவர்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் சேமிப்பை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உருவாக போகிறது. வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கக்கூடிய நபர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் துணையுடன் சந்தித்து வந்த பிரச்சனைகளும் போராட்டங்களும் விலகும். தொழில் கூட்டாளிகளுடன் மனக்கசப்புகள் விலகி லாபமும் தொழிலை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |