மேஷ ராசியினருக்கு டிசம்பரில் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்.. ஜோதிடர் ராம்ஜி கணிப்புகள்

By Sakthi Raj Nov 15, 2026 04:45 AM GMT
Report

ஜோதிட ரீதியாக டிசம்பர் மாதம் மேஷ ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள். அதை பற்றி பார்ப்போம். மேஷ ராசியினருக்கு டிசம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகவே பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் சூரியன் மற்றும் அதன் ஒன்பதாம் இடத்திற்கு மாறுவதால் இவர்களுக்கு வேலை மற்றும் தொழில் ரீதியாக பதவி உயர்வு மற்றும் புதிய முயற்சிகள் வெற்றி வாய்ப்புகள் கைப்கூடிவரும்.

அதேபோல், பத்தாம் இடத்தில் ராகு இருப்பதால் தொழில் ரீதியாக செய்யும் முதலீடுகள் குறிப்பாக ஹோட்டல் போன்ற தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கொடுக்க உள்ளது.

மேஷ ராசியினருக்கு டிசம்பரில் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்.. ஜோதிடர் ராம்ஜி கணிப்புகள் | 2026 Mesha Rasi December Predictions

6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் இதைச் செய்ய மறக்காதீர்கள்..

6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் இதைச் செய்ய மறக்காதீர்கள்..

இருப்பினும், இவர்களுக்கு நான்காம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் இவர்கள் தாயார் உடல் நலனில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மேஷ ராசியினர் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு பரிகாரமாக ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

அதே போல், கந்த சஷ்டி கவசம் கேட்பதும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் வாழ்க்கையில் இருக்க கூடிய தடைகள் தடங்கல் யாவும் விலகும். அதே போல், டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் இவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

டிசம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நல்ல மாற்றங்களை கொண்டுவரக்கூடிய நாட்களாகவும் மகிழ்ச்சியான நாட்களாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், மேஷ ராசிக்கு டிசம்பர் மாதம் என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கிறது என்று பல்வேறு தகவல்களை இந்த காணொளியில் பார்க்க தெரிவித்துக் கொள்வோம்.  

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US