2026: நவ பஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் 3 முக்கிய ராசிகள்
2026 ஆம் ஆண்டில் நவப பஞ்ச ராஜயோகம் உருவாகிறது. அதாவது குரு மற்றும் புதன் கிரகங்கள் இணைய இருப்பதால் இந்த யோகம் உருவாகிறது. ஜோதிட கணக்கின்படி பிப்ரவரி 17ஆம் தேதி அன்று அதிகாலை 2:59 மணிக்கு குருவும் புதனும் 120 டிகிரி கோணத்தில் இணைந்து இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் குரு மிதுன ராசிகயிலும், புதன் கும்ப ராசிகளும் இருப்பார்கள். குறிப்பாக கும்ப ராசியில் புதனுடன் சூரியனும் சுக்கிரனும் மற்றும் ராகு இணைந்திருப்பதால் இந்த யோகத்தின் பலம் சற்று கூடுதலாக இருக்கப்போகிறது.
இந்த காலகட்டத்தில் குரு மிதுன ராசி ஜூன் இரண்டாம் தேதி வரை அங்கு இருப்பார். இந்த சஞ்சாரமானது மிகப்பெரிய அளவில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடுக்க உள்ளது.

மீனம்:
நவ பஞ்சம ராஜ யோகத்தால் மீனராசியினருக்கு இந்த நேரத்தில் வெளிநாடு மற்றும் வெளியூர் பயணம் செல்லக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பு உருவாக போகிறது. ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வி படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் உருவாகும். சமுதாயத்தில் உயர்ந்த பொறுப்புகள் இவர்களை தேடி வரும்.
கும்பம் :
கும்ப ராசியினருக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் இவர்களுக்கு மங்களகரமான விஷயங்கள் வீடுகளில் நடக்க உள்ளது. தாய் மற்றும் தந்தை வழியே இவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் இவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டாகக்கூடிய காலகட்டம் ஆகும். நண்பர்கள் வழியே உங்களுக்கு நல்ல அனுகூலம் உண்டாகும். ஒரு சிலர் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் போடுவதைப் பற்றி யோசனை செய்வீர்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு நவ பஞ்சம ராஜ யோகத்தால் கடன் தொல்லைகளிலிருந்து இவர்கள் விடுபட போகிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். குழந்தைகள் உடல்நலையில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் இந்த காலகட்டங்களில் உங்கள் கைகளுக்கு வந்து சேரக்கூடிய அற்புதமான காலகட்டமாகும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்ல நேரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |