இன்று (24-01-2026) வசந்த பஞ்சமி.. இந்த ஒரு விஷயம் செய்ய மறக்காதீர்கள்
திதிகளில் ஐந்தாவது திதியாக வரக்கூடிய வசந்த பஞ்சமி பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். அதிலும் குறிப்பாக வராஹி தேவியை இன்றைய தினம் வழிபாடு செய்தால் நம்முடைய எதிரிகள் தொல்லை, வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் அடியோடு அழியும் என்பது நம்பிக்கை.
ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியை கருட பஞ்சமி என்று அழைப்பார்கள். அன்று கருடனை வழிபாடு செய்தால் மிகச்சிறந்த பலன் நமக்கு கிடைக்கும். அதே போல் புரட்டாசி மாத வளர்பிறை பஞ்சமியை, ரிஷி பஞ்சமி என்று அழைப்பார்கள். அன்றைய நாளில் சப்தரிஷிகளை நோக்கி பெண்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள்.
"சிம்ஹ கிருஷ்ண பஞ்சமி" என்பது ஆவணி மாதம் வருகின்ற தேய்பிறை பஞ்சமி ஆகும். அப்படியாக, வேதங்களில் புகழப்படும் பல தெய்வங்களில் மிக முக்கியமான தெய்வம் சரஸ்வதி தேவி ஆவார்.
இவள் யாகத்தை காக்கும் தேவதையாகவும் யாகத்தை நடத்துபவர்களுக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை கொடுக்கக்கூடிய தேவதையாகவும் புகழப்படுகிறார். சரஸ்வதி தேவி ஆதி பராசக்தியின் அம்சம் ஆவாள்.

கல்வி மற்றும் எல்லா கலைகளுக்கும் அதிபதி அவளே. அந்த வகையில் சரஸ்வதி தேவியின் அவதார நாளாக கொண்டாடப்படுவது வசந்த பஞ்சமி ஆகும். தை மாதம் வரும் பஞ்சமியான வசந்த பஞ்சமியை மகா பஞ்சமி என்று அழைப்பார்கள்.
ஸ்ரீ பிரம்மாவின் மனதில் இருந்து சரஸ்வதி அவதரித்ததாகவும் புராணங்கள் நமக்கு சொல்கிறது. ஆக, இன்றைய நாளில் நாம் சரஸ்வதி தேவிக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்தால் மிகச்சிறந்த ஞானத்தை நாம் பெறலாம்.

மேலும், கிருஷ்ண பகவான் சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்றைய நாள் தான். ஆக வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதிதேவியை வழிபாடு செய்தால் கலைகளில் நாம் முன்னேற்றம் அடைவதோடு ஆன்மீகத்திலும் கல்வியிலும் சிறந்த விளங்கக்கூடிய ஞானத்தை அன்னை சரஸ்வதி தேவி நமக்கு வழங்குவார்.
மிக முக்கியமாக மனதில் இருக்கக்கூடிய இருள் நீங்கி ஞான ஒளி பெருகி வாழ்வில் வசந்தம் உண்டாக சரஸ்வதி தேவி நமக்கு அருள் புரிவாள். முடிந்தவர்கள் அருகில் இருக்கக்கூடிய ஆலயம் சென்று சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து அவர்களுடைய மந்திரங்களை பாராயணம் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |