கும்பத்தில் உதயமாகும் புதன்: மார்ச் 15 முதல் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!
ஜோதிட கணிப்புகளில் நவகிரகங்களின் நிலையானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் கிரங்களின் இடப்பெயர்வானது 12 ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக அறியபப்படும் புதன் பனவான் தற்போது கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருக்கின்றார்.

ஆனால் எதிர்வரும் 15 ஆம் திகதியில் கும்ப ராசியிலேயே மீண்டும் உதயமாகவுள்ளார். அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

புதன் பகவானின் ஆசியால் மிதுன ராசியினரின் தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதக மாற்றங்கள் உருவாகும். குறிப்பாக பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும்.
புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக போராடியவர்களுக்கு இந்த காலகட்டம் அதற்கான வாய்ப்புகளை கைமேல் கொண்டுவந்து கொடுக்கும்.
கல்வி சாந்ந்து புதிய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும்.பணியிடத்தில் உங்களின் அறிவாற்றலால் பராட்டுகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதியில் இருந்து, கடந்த காலங்களில் தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும்.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி, அமைதியாக சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புககள் அதிகரிக்கும்.
இதுவரை காலமும் நிலுவையில் இருந்த முக்கிய பணிகள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பணவரவு திருத்திகரமாக இருக்கும்.
கும்பம்

கும்ப ராசியிலேயே புதன் உதயமாகவுள்ளதால், அவர்களுக்கு தொழில் ரீதியில் அமோக மாற்றங்கள் நிகழும். இவர்கள் நீண்ட காலமாக ஆசைப்பட்ட பதவியில் அமர்வதற்காக வாய்ப்பு அமையும்.
ஏற்றுமதி தெழிலில் ஈடுபடும் வியாபாரிகள் சர்வதேச அளவில் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பை பெறுவார்கள். வியாபாரிகள் இரட்டிப்பு லாபம் பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
புதிய முயற்ச்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.குறிப்பாக பணவரவில் எதிர்பாராத அளவுக்கு ஏற்றம் உண்டாகும். புதனின் ஆசியால் சிந்தனையில் தெளிவு பிறக்கும்.