12 ராசி பெண்களுக்கும் 2026 புது வருடம் எப்படி உள்ளது? எதில் கவனம் தேவை?

By Sakthi Raj Dec 25, 2025 07:35 AM GMT
Report

 பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆண்களை விட அவர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்தில் பொறுப்புகள் சுற்றும் அதிகமாகவே இருக்கிறது. ஆக அந்த பொறுப்புகளை மீறி அவர்களுடைய கனவுகளை அடைய நிறைய போராட்டங்களை சந்திக்க கூடிய நிலை வருகிறது.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு பெண்களுக்கு எவ்வாறு இருக்கப் போகிறது? எந்தெந்த துறைகளில் பெண்கள் சாதிக்க காத்திருக்கிறார்கள் என்று 12 ராசிகளுக்கு உரிய பெண்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான பலன்களை பற்றி பார்ப்போம்.

12 ராசி பெண்களுக்கும் 2026 புது வருடம் எப்படி உள்ளது? எதில் கவனம் தேவை? | 2026 New Year Astrology Prediction For Women

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு 2026 நிச்சயம் ஒரு நல்ல தொடக்கமாகவே இருக்கப்போகிறது. திருமண வாழ்க்கையில் இருக்க கூடிய பெண்களுக்கு கணவன் இடையே இருந்து ஒரு நல்ல ஆறுதலும் அன்பும் கிடைக்கப் போகிறது.

உடல் ஆரோக்கியத்தில் இவர்கள் முன்னேற்றம் காணப் போகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இவர்களை கவனித்துக் கொள்ளக்கூடிய விதமாக இவர்கள் அழகிலும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தக்கூடிய ஆண்டாக இருக்கப் போகிறது.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த 2026 மெதுவாக நகர்வது போல் இருந்தாலும் நிச்சயம் நிலையானதாக இருக்கப் போகிறது. உடனடியாக வாழ்கையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்ப்பதை காட்டிலும் நிதானமாக பொறுமையாக காத்திருக்கும் பொழுது தொழில் ரீதியாக ஒரு நல்ல வாய்ப்புகள் அமையும்.

கணவன் மனைவியிடையே ஒரு காதல் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஆரோக்கிய ரீதியாக மட்டும் சற்று கவனம் செலுத்தினால் நல்ல ஆண்டாகவே அமையும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு 2026 ஆம் ஆண்டு சமுதாய பணிகளில் இவர்கள் நிறைய ஈடுபாடு செலுத்த போகிறார்கள். ஒரு சிலர் அவர்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்காக நிறைய வகுப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

புதிய காதல் வாழ்க்கை ஒரு சிலருக்கு மலரக்கூடிய அற்புதமான ஆண்டு. திருமணமான பெண்களுக்கு மனதில் உள்ளதை கணவருடன் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நிலை உருவாகும். இருப்பினும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் நன்மை.

காலத்திடமிருந்து யாரும் தப்பவே முடியாது.. சீதை சொல்லும் ரகசியம்

காலத்திடமிருந்து யாரும் தப்பவே முடியாது.. சீதை சொல்லும் ரகசியம்

கடகம்:

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு உணர்வு ரீதியாக ஒரு புது அனுபவத்தை கொடுக்கப் போகிறது. அதாவது முன்பை விட நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் நிறைய கோபம் உண்டாகக்கூடிய ஒரு காலகட்டமாக அமையலாம்.

அதனால் குடும்பம் தொழில் என்று எல்லாவற்றிலும் நீங்கள் அமைதியாக சொல்வது அவசியமாக இருக்கிறது. உங்களுடைய உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளிடம் இருந்து நீங்கள் ஒரு நல்ல ஆதரவை பெற்று தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். ஒரு சிலர் வீடுகளை விட்டு வெளியே சென்று பணி செய்யக்கூடிய நிலை உருவாகலாம்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு நிச்சயம் ஒரு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்க காத்திருக்கிறது. இவர்களுடைய ஆளுமை திறன் இந்த வருடம் மிக அழகாக வெளிப்படுத்தப் போகிறார்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் அவர்கள் நினைத்த இடத்தில் வேலை கிடைக்கக்கூடிய நிலைமையும் அவர்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும்.

காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் எல்லாம் விலகும். திருமணம் ஆகாமல் இருக்கக்கூடிய பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடிய எண்ணமும் அதற்கான ஒரு நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். இருப்பினும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் நலத்தை பாதுகாக்கலாம்.

கன்னி:

கன்னி ராசி பிறந்த பெண்களுக்கு மன அமைதியை கொடுக்கக்கூடிய ஆண்டாக இந்த 2026 ஆம் ஆண்டு இருக்கப் போகிறது. வேலையில் நீங்கள் படிப்படியாக முன்னேற்றத்தை காண போகிறீர்கள். மனரீதியாக ஒரு நல்ல தெளிவுகள் கிடைத்து நீங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய நிலை உருவாகும்.

ஒரு சிலர் தியானங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவார்கள். இருப்பினும் கண் மற்றும் வயிறு தொடர்பான விஷயங்களை நீங்கள் கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு நிலையான காதல் மற்றும் திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப் போகிறது. இவர்களுடைய பேச்சுத் திறமையால் இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய சாதனையை செய்ய காத்திருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

இருந்தாலும் வேலை தொடர்பாக குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம். அதில் மட்டும் சற்று கவனம் செலுத்த வேண்டும். நிறைய நேரங்களில் பெண்களுக்கு அவர்களுடைய பொறுமையை சோதிக்கும் விதமாக நிறைய சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை.

புயலே வந்தாலும் இந்த ராசியினரை மட்டும் எதுவும் செய்யமுடியதாம்- யார் தெரியுமா?

புயலே வந்தாலும் இந்த ராசியினரை மட்டும் எதுவும் செய்யமுடியதாம்- யார் தெரியுமா?

விருச்சிகம்:

விருச்சி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு எந்த ஒரு கவனச்சிதறல் இல்லாமல் அவர்களுடைய கடமையை செய்யக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. கடினமான உழைப்புகளை இந்த ஆண்டு இவர்கள் போட காத்திருக்கிறார்கள்.

தொழில் ரீதியாக நீங்கள் உங்களுக்கு ஏற்படக்கூடிய தடுமாற்றங்களில் இருந்து விடுபட்டு கவனம் செலுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய ஏற்றம் பெறலாம். காதல் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு ஒரு சில ஆச்சிரியங்கள் காத்திருக்க கூடிய ஆண்டு. வயிறு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு மகிழ்ச்சியை கொண்டு வந்து இவர்களிடம் சேர்க்க போகிறது. மனரீதியாக இவர்களுடைய நம்பிக்கையால் மிகப்பெரிய உயரத்தை எட்ட போகிறார்கள்.

புதிய புதிய வாய்ப்புகள் தொழில் ரீதியாக இவர்களைத் தேடி வர போகிறது. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தினருடன் அற்புதமான நேரத்தை செலவிட கூடிய காலமாக இருக்கப்போகிறது. இருந்தாலும் கண் கால் மற்றும் தூக்கம் தொடர்பான விஷயங்களை இவர்கள் நிச்சயம் அக்கறை செலுத்த வேண்டும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புது வருடத்தில் கடமைகள் அதிகமாக போகிறது. இருந்தாலும் உங்களுடைய நடவடிக்கைகளால் வருகின்ற பொறுப்புகளை நீங்கள் சரியாக கையாள போகிறீர்கள். ஒரு சிலருக்கு பொன் பொருள் மற்றும் நிலம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும்.

தொழில் ரீதியாக நீங்கள் பொறுமையாகவும் கடின உழைப்பை போட்டால் மட்டுமே நல்ல முன்னேற்றம் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நீங்கள் நிறைய புரிதலோடு செயல்பட வேண்டிய காலம். உணவு விஷயங்களில் மட்டும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2026-ல் காதல் திருமணம் செய்யும் யோகம் கொண்ட 4 அதிர்ஷ்ட ராசிகள்

2026-ல் காதல் திருமணம் செய்யும் யோகம் கொண்ட 4 அதிர்ஷ்ட ராசிகள்

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு நிறைய விஷயங்களை கற்றுத் தெளிந்து கொள்ளக்கூடிய அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சிலர் தங்களுடைய தோழிகளுடன் நீண்ட தூரம் பயணம் சென்று மகிழ்ச்சியான நேரத்தை செலவிட கூடிய அமைப்பு உருவாகலாம்.

இருந்தாலும் உங்கள் சொந்த பணத்தை கொண்டு நீங்கள் ஒரு நிலம் அல்லது நகை வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதை கவனமான முறையில் வாங்குங்கள். உடல் ரீதியாக நல்ல மாற்றமும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய ஆண்டாகவும் அமையப் போகிறது.

மீனம்:

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு மனரீதியாக ஒரு அமைதியையும் எல்லா விஷயங்களையும் பக்குவமாக கையாளக்கூடிய ஒரு தன்மையையும் கொடுக்கப்போகிறது. நீங்கள் சமுதாயத்தில் ஒரு நல்ல மதிக்கக்கூடிய இடத்தில் அமர போகிறீர்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பக்குவமாக சிந்தித்து செயல்பட காத்திருக்கிறீர்கள்.

குடும்பத்தில் என்ன நடந்தாலும் உங்களுடைய சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காமல் அதற்கு தகுந்தாற்போல் உங்களுடைய வாழ்க்கை அமைத்துக் கொண்டு முன்னேற போகிறீர்கள். இறைவழிபாடுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நிச்சயம் நல்ல மாற்றம் உண்டாகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US