2026: ஜனவரி மாதம் இந்த 3 ராசிகளுக்கு கவனம் தேவை.. கெட்ட நேரம் ஆரம்பம்

By Sakthi Raj Jan 04, 2026 05:27 AM GMT
Report

 2026 மிகச் பிறந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கிரகங்கள் முக்கியமான நிகழ்வுகள் நடத்த இருக்கின்றன. இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயமாக பல்வேறு விதமான தாக்கங்கள் இருக்கும்.

அப்படியாக, 2026 வருடம் முதல் மாதமான ஜனவரி மாதம் ஒரு சில ராசிகளுக்கு சற்று ஒரு குழப்பமாகவும் கடினமான காலமாகவும் இருக்கக்கூடும் என்று ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது. அதனால் இவர்கள் முன்னெச்சரிக்கையாக செய்யக்கூடிய விஷயங்களில் கவனமாக இருந்தால் இவர்களை பாதுகாத்துக் கொள்ளலாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: ஜனவரி மாதம் இந்த 3 ராசிகளுக்கு கவனம் தேவை.. கெட்ட நேரம் ஆரம்பம் | 2026 New Year January Month Astrology Prediction

2026-ல் இந்த ராசிகளிடம் கவனமாக இருங்கள்.. ஆபத்து உறுதி

2026-ல் இந்த ராசிகளிடம் கவனமாக இருங்கள்.. ஆபத்து உறுதி

கடகம்:

கடக ராசியினர் இந்த மாதத்தை மட்டும் அமைதியாக கடந்து விட்டால் வருகின்ற மாதங்களை இவர்கள் சமாளித்து விடலாம். காரணம் இந்த மாதம் இவர்களுக்கு மனரீதியாக கட்டுப்பாட்டை இழக்க நேரலாம். குறிப்பாக குடும்ப விஷயங்களில் இவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

எந்த ஒரு அவசர செயல்களிலும் இவர்கள் ஈடுபடுத்த கூடாது. முடிந்தவரை யாரிடமும் அதிகமாக பேசாமல் ஆன்மீக வழிபாடுகளில் பங்கு கொண்டால் மட்டுமே இந்த மாதத்தை இவர்கள் சிறப்பாக கடக்க முடியும்.

மிதுனம்:

இந்த மாதம் இவர்களுக்கு நிச்சயம் வேலை ரீதியாக ஒரு சிரமத்தை சந்திக்கப் போகிறார்கள். உயர் அதிகாரிகள் கொடுத்த வேலையை இவர்கள் சரியான நேரத்தில் முடிக்க முடியாத ஒரு நிலையால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரும்.

தொழில் ரீதியாக சரியான ஈடுபாடு இல்லாத நிலை இவர்களுக்கு உண்டாகும். ஆதலால் முடிந்தவரை பிரச்சனை வந்துவிட்டதே என்று பாராமல் அதை எவ்வாறு உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்ய முடியும் என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எல்லாம் சிறப்பாக அமையும்.

2026-ல் முதல் ஏகாதசி எப்பொழுது தெரியுமா ? முழு விவரங்கள் இதோ

2026-ல் முதல் ஏகாதசி எப்பொழுது தெரியுமா ? முழு விவரங்கள் இதோ

விருச்சிகம்:

இந்த மாதம் இவர்களுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. எதிர்ப்பாராத சில கடினமான நாட்களை இவர்கள் எதிர்கொள்ள காத்திருக்கிறார்கள். ஆரோக்கியம் குடும்பம், தொழில் என்று இவர்கள் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இதெல்லாம் பார்க்கும் பொழுது இவர்கள் முதலில் இந்த மாதம் இவர்களுடைய ஆரோக்கியத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். இவர்களுடைய தொழில் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு பிறகு கவனம் செலுத்தினால் போதும். வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டு ஆரோக்கியத்தை கவனம் செலுத்தினால் நன்மை உண்டு. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US