மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் காத்திருக்கக்கூடிய நற்செய்தி என்ன?
ஜோதிட ரீதியாக கிரகங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில், மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வெளிநாடு செல்லக்கூடிய முயற்சிகள் கைகூடி வரப்போகிறது.
வெளிநாடு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் நற்பலன்களை கொடுக்கும். இவர்களுக்கு பெரிய அளவில் சொத்து அல்லது நிலம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பதால் பங்கு சந்தை முதலீடுகள் இவர்களுக்கு நல்ல லாபத்தை வழக்கும்.
மேலும், குழந்தை தொடர்பான முயற்சிகளுக்கு இந்த மாதம் சற்று ஏமாற்றத்தை தரலாம். கேது பகவான் நான்காம் இடத்திற்கு வருவதால் தாயார் உடல் நிலையில் மட்டும் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
ஏதேனும், உடல் நலனில் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். மேலும், சூரியன் நீசம் அடைந்திருப்பதால் 17ஆம் தேதி வரை தலைமை பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கு ஒரு கடினமான காலகட்டமாக இருக்கும் என்பதால் அலுவலகத்தில் நிதானமான பேச்சுக்களை கடைபிடிப்பது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |