2026 கேது பெயர்ச்சி: பிரச்சனைகளில் சிக்கப் போகும் அந்த ராசிகள் யார்?

By Sakthi Raj Oct 06, 2026 10:17 AM GMT
Report

ஜோதிட ரீதியாக நிழல் கிரகமாக இருக்கக்கூடிய கேது பகவான் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார். அந்த வகையில், கேது பகவான் மக நட்சத்திரத்தில் நுழைந்த நிலையில் அந்த மாற்றம் நான்கு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் சோதனையை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

தற்போது சிம்ம ராசியில் இருக்கின்ற கேது பகவான் அக்டோபர் மூன்றாம் தேதி மக நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் நுழைந்ததாக ஜோதிடம் சொல்கிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை கொடுக்கலாம். அவை எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 கேது பெயர்ச்சி: பிரச்சனைகளில் சிக்கப் போகும் அந்த ராசிகள் யார்? | 2026 Oct 3 Kethu Peyarchi Astrology Prediction

கும்ப ராசியில் பிறந்தவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

கும்ப ராசியில் பிறந்தவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

 

ரிஷபம்:

இந்த காலகட்டங்களில் இவர்கள் சற்று மன அழுத்தத்தை உணரலாம். சுற்றிலும் நண்பர்களும் உறவினர்களும் குடும்பமும் இருந்தாலும் தனிமையாக உணர்வது போல் இவர்கள் காணப்படுவார்கள். பண விஷயங்களில் சில சிக்கல்கள் வரலாம். அவசரமாக பணம் கொடுத்து எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

கடகம்:

இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு சவாலாகவே இருக்கப்போகிறது. பேச்சில் இவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிறிய வார்த்தை கூட குடும்பத்தில் தேவை இல்லாத கருத்து வேறுபாட்டை உருவாக்கலாம்.

குறிப்பாக கடன் கொடுப்பதை தவிர்ப்பது இவர்களுக்கு நன்மையை கொடுக்கும். அவ்வாறு கொடுத்த நேர்ந்தால் கவனமாக கொடுக்க வேண்டும். வாய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இடம் மாற்றம் செய்தால் நிச்சயம் 100% வெற்றி உண்டு

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இடம் மாற்றம் செய்தால் நிச்சயம் 100% வெற்றி உண்டு

மீனம்:

இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் பண விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளை சந்திக்கலாம். பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிலும் அவசரம் காட்ட வேண்டாம்.

குடும்பத்தினரிடமிருந்து எதிர்ப்பு அல்லது கருத்து வேறுபாடுகள் சந்திப்பீர்கள். உடல் மற்றும் பொருளாதாரத்தில் அலட்சியம் செய்யக்கூடாது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US