2026: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார் ?

By Sakthi Raj Oct 17, 2026 08:30 AM GMT
Report

 சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் ஒரு ராசியில் இருந்து வேறு ஒரு ராசிக்கு மாறுவதற்கு சுமார் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அப்படியாக சனி பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் உத்திராடம் நட்சத்திரத்தில் வக்கிர நிலையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பிப்ரவரி 2027 சுமார் வரை 118 நாட்கள் பயணிக்க உள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார் ? | 2026 October Sani Nakshtara Peyarchi Prediction

குழந்தைகள் அதிக மார்க் வாங்குவதற்கு சொல்ல வேண்டிய சரஸ்வதி மந்திரம்

குழந்தைகள் அதிக மார்க் வாங்குவதற்கு சொல்ல வேண்டிய சரஸ்வதி மந்திரம்

ரிஷபம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் புதிய வேலைவாய்ப்புகளை கொடுக்கப் போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யக்கூடிய இடங்களில் பணி மாற்றம் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட காலம் உழைத்ததற்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள்.

மிதுனம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரப் போகிறது. வேலை செய்யும் இடங்களில் கடினமான வேலைகளையும் சரியாக செய்து முடிப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம்.

வீட்டில் பிரச்சனை நிரந்தரமாக தீர குலதெய்வத்தை இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்

வீட்டில் பிரச்சனை நிரந்தரமாக தீர குலதெய்வத்தை இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்

துலாம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் புதிய பொறுப்புகள் தேடி வரப்போகிறது. பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் சாதகமாக அமையும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை சந்திப்பீர்கள். வேலையில் முழு அர்ப்பணிப்புடன் செயல் பட்டால் நல்ல பலன்களை பெறலாம்.

கும்பம்:

இவர்களுக்கு இந்த காலம் கடின உழைப்பால் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. முயற்சிக்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். இதுவரை சந்தித்த தடைகள் விலகி முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். ஏழரை சனி நடைபெறுவதால் ஒரு சிலருக்கு தாமதமாக வாய்ப்புகள் கிடைத்தாலும் நிலையானதாக கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US