2026: பஞ்ச மகா புருஷ யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு திரும்பிய திசை எல்லாம் பண மழை தான்

By Sakthi Raj Jul 05, 2026 10:00 AM GMT
Report

 ஜோதிட சாஸ்திரத்தில் உயர்ந்த நிலைக்கு கூட்டி செல்ல மிகவும் சக்தி வாய்ந்த யோகமாக இந்த பஞ்சமகா புருஷ யோகம் இருக்கிறது. நவகிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் நிழல் கிரகங்களான ராகு கேதுகளை தவிர்த்து மற்ற ஐந்து முக்கிய கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சனி ஆகிய கேந்திர ஸ்தானங்கள் எனப்படும் 1,4,7, 10 வீடுகளில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமையும் போது இந்த யோகம் உண்டாகிறது.

இந்த காலகட்டங்களை செல்வத்தை வாரி வழங்கக்கூடிய காலகட்டமாக பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் இருந்து நமக்கு பணவரவு வந்து கொண்டே இருக்கும் என்றும் சொல்கிறார்கள். காரணம், செவ்வாயால் திசை யோகமும் புதனால் பத்ர யோகமும், குருவால் ஹம்ச யோகமும், சுக்கிரனால் மாளவ்ய யோகமும், சனியால் சச யோகமும் உருவாகின்றன.

அந்த வகையில் தற்பொழுது கோச்சார கிரகங்களின்படி விருச்சிகம், கும்பம், கடகம் ஆகிய மூன்று ராசிகளுக்கு இந்த மகா பஞ்ச புருஷ யோகத்தின் பலன்கள் முழுமையாக கிடைக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் வாழ்க்கையில் சிக்கல்கள் விலகி சக்சஸ் ஆரம்பமாகும் காலம் என்றும் சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

2026: பஞ்ச மகா புருஷ யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு திரும்பிய திசை எல்லாம் பண மழை தான் | 2026 Pancha Mahapurusha Yoga Give Luck For 3Zodiac

ஆன்மீகம்: கணவன் வெளியே சென்ற பிறகு மனைவி செய்யக்கூடாத 5 விஷயங்கள்

ஆன்மீகம்: கணவன் வெளியே சென்ற பிறகு மனைவி செய்யக்கூடாத 5 விஷயங்கள்

விருச்சிகம்:

இவர்களுக்கு நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணம் கைகளுக்கு வந்து சேர போகிறது. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைவார்கள். ஒரு இடத்தில் பணம் முடங்கி கிடக்கிறது என்று வருந்துபவர்களுக்கு இந்த காலகட்டம் அவர்களுடைய பணம் கைகளுக்கு வந்து சேர போகிறது.

புதிய வீடு, நிலம், சொத்து வாங்கக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் உருவாகும். வேலையில் வெற்றி புதிய பொறுப்புகள் தேடி வரும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறார்கள்.

கடகம்:

பல வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் வந்து சேர போகிறது. தடைப்பட்டு கொண்டிருந்த சுபகாரியங்கள் திருமண பேச்சுகள் நல்ல முறையில் முடிவைப்பெறும். ஆன்மீக பயணங்கள் வழியாக மன அமைதியும் உங்களுக்கு நல்ல கௌரவம் கிடைக்கும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே சாதகமான சூழ்நிலை உருவாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதாக கிடைக்கும். வேலையில் சம்பள உயர்வுடன் நீங்கள் நினைத்த பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

12 ராசிக்காரர்களுக்கும் இருக்கக்கூடிய அசைக்க முடியாத திறமை என்ன தெரியுமா ?

12 ராசிக்காரர்களுக்கும் இருக்கக்கூடிய அசைக்க முடியாத திறமை என்ன தெரியுமா ?

கும்பம்:

கும்ப ராசியின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். தனது சொந்த வீட்டிலே இருப்பதால் இவர் தச யோகத்தை தருவதோடு சுக்கிர பகவானின் சுப பார்வையும் இணைவதால் இவர்களுக்கு பொற்காலம் தொடங்குகிறது. வெற்றிகள் இவர்கள் கைகளுக்கு வந்து சேரும்.

எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்கு உதவிகள் வந்து சேரும். பழைய கடன்களை அடைக்க கூடிய யோகம் உருவாகும். வியாபாரத்தில் முதலீடுகள் உங்களுக்கு பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கும்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US