ஆன்மீகம்: கணவன் வெளியே சென்ற பிறகு மனைவி செய்யக்கூடாத 5 விஷயங்கள்
நம்முடைய ஆன்மீகத்தில் நிறைய விஷயங்களை நாம் பின்பற்றி வருகிறோம். அப்படியாக, நம்முடைய வீடுகளில் ஒரு சில பழக்க வழக்கங்களை நாம் நடைமுறையில் கொண்டு வருகின்ற பொழுது நம்முடைய வீட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.
மேலும், அந்த பழக்க வழக்கங்களுக்கு பின்னால் ஒரு ஆழமான கருத்துக்களும் உள்ளது. அப்படியாக, வீடுகளில் பெண்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1. வீடுகளில் பெண்கள் கணவன் வீட்டில் இருந்து வெளியே சென்றவுடன் உடனடியாக கதவுகளை மூடக்கூடாது.
2.அதேபோல், கணவன் வீட்டை விட்டு சென்றவுடன் உடனடியாக வீடுகளை துடைப்பது சுத்தம் செய்வது போன்ற விஷயங்களை செய்யப்படாது.
3. வீடுகளில் பெண்கள் கணவன் வெளியே சென்றவுடன் உடனடியாக தலைக்கு குளிப்பது தலையில் எண்ணெய் வைப்பது போன்ற விஷயங்களையும் செய்யக்கூடாது.
4. அதேபோல் கணவன் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் உடனடியாக வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடக்கூடாது.
5. கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் உடனடியாக துணிகளையும் துவைக்க கூடாது ஒரு மணி நேரம் அல்லது 40 நிமிடம் கழித்து இந்த வேலைகளை நாம் செய்யலாம்.
இவையெல்லாம் பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில் நமக்கு சொல்லப்பட்ட விஷயமாக உள்ளது.
ஆனால், இதற்குப் பின்னால் ஆழமான கருத்துக்களும் நிறைந்துள்ளது. பொதுவாக, யார் வீட்டிற்கு வந்து சென்றாலும் மேற்கொண்டு சொன்ன விஷயங்களை நாம் செய்வது கூடாது என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு செய்வது அந்த உறவுகளுக்கும் நமக்கும் இடையே சில விரிசல்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |