2026: பங்குனி மாதத்தில் தவறவிடக்கூடாத முக்கியமான விசேஷ மற்றும் விரத நாட்கள்
தமிழ் மாதம் 12 மாதங்களில் கடைசி மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. அதாவது சூரிய பகவான் ராசிகளில் 12வது ராசியான மீன ராசியில் சஞ்சரிக்கக்கூடிய அந்த காலம் தான் பங்குனி மாதம் ஆகும். மேலும், பங்குனி மாதம் ஆன்மீக ரீதியாகவும் நிறைய விசேஷங்களை கொண்டிருக்கிறது.
காரணம் அந்த மாதத்தில் எல்லா தெய்வங்களுடைய திருக்கல்யாணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு பங்குனி மாதத்தில் தான் மகாலட்சுமி ஐயப்பன் ஆகியோர் அவதரித்தார்கள்.
பாற்கடலில் இருந்து அமுதம் கிடைத்து அதை தேவர்கள் இந்த பங்குனி மாதம் தான் அருந்தினார்கள். அப்படியாக பங்குனி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்களை பற்றி பார்ப்போம்.

பங்குனி 2026 சுபமுகூர்த்த நாட்கள்:
பங்குனி 1, 2026 - மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை முகூர்த்தம்
பங்குனி 2, 2026 - மார்ச் 16 திங்கட்கிழமை தேய்பிறை முகூர்த்தம்
பங்குனி 11, 2026 - மார்ச் 25 புதன்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
பங்குனி 23, 2026 - ஏப்ரல் 6 திங்கட்கிழமை தேய்பிறை முகூர்த்தம்
பங்குனி 29, 2026 - ஏப்ரல் 12 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை முகூர்த்தம்
பங்குனி 30, 2026 - ஏப்ரல் 13 திங்கட்கிழமை தேய்பிறை முகூர்த்தம்
முக்கிய விசேஷங்கள் மற்றும் பண்டிகைகள்:
பங்குனி 5, 2026 - மார்ச் 19 வியாழக்கிழமை உகாதி / தெலுங்கு வருடப்பிறப்பு
பங்குனி 7, 2026 - மார்ச் 21 சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை
பங்குனி 13, 2026 - மார்ச் 27 வெள்ளிக்கிழமை ஸ்ரீராம நவமி
பங்குனி 17, 2026 - மார்ச் 31 செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி
பங்குனி 20, 2026 - ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
பங்குனி 22, 2026 - ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் ஞாயிறு
விரத நாட்கள், அமாவாசை, பௌர்ணமி:
பங்குனி 1, 2026 - மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி, திருவோண விரதம்
பங்குனி 2, 2026 - மார்ச் 16 திங்கட்கிழமை சோமவார பிரதோஷம்
பங்குனி 4, 2026 - மார்ச் 18 புதன்கிழமை பங்குனி அமாவாசை
பங்குனி 10, 2026 - மார்ச் 24 செவ்வாய்க்கிழமை சஷ்டி விரதம்
பங்குனி 15, 2026 - மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி
பங்குனி 16, 2026 - மார்ச் 30 திங்கட்கிழமை சோமவார பிரதோஷம்
பங்குனி 18, 2026 - ஏப்ரல் 1 புதன்கிழமை பங்குனி உத்திரம், பௌர்ணமி
பங்குனி 22, 2026 - ஏப்ரல் 1 ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி
பங்குனி 27, 2026 - ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |