2026 செப்டம்பர் மாத பலன் : மீன ராசியினர் பெரிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டுமாம்

By Sakthi Raj Aug 24, 2026 04:34 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் தங்களுடைய இடத்தை ஒவ்வொரு கால இடைவேளையில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், செப்டம்பர் மாதம் மீன ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

மீன ராசியினர் குரு பகவானின் ஆதிக்கத்தை கொண்டிருப்பதால் இவர்கள் எப்பொழுதும் தனித்துவமாக இருப்பார்கள். ஒருவருக்கு வழிகாட்டுதலோடு அமைவார்கள். அப்படியாக, இந்த மாதம் இவர்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கப் போகிறது.

மன அமைதியுடனும் ஆன்மீகத்துடனும் இருப்பது இவர்களுக்கு நன்மையை பெற்றுக் கொடுக்கும். இந்த மாதம் மீன ராசிக்காரர்களுக்கு பணவரவு மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது. குறிப்பாக செவ்வாய் பகவான் நீசபங்க ராஜயோகம் அடைவதால் இவர்களுக்கு பணமழை பொழிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஜோதிட ரீதியாக உங்களுக்கு எந்த தசாபுத்தி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும்?

ஜோதிட ரீதியாக உங்களுக்கு எந்த தசாபுத்தி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும்?

இருப்பினும் அரசியலில் ஈடுபடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். வியாபார கூட்டாளிகளுடன் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது கூடுதல் கவனத்தோடு இருப்பது அவசியம். பெண்களுக்கு எதிரான தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

சொத்து வாங்குவதற்கும் முக்கியமான சொத்துக்களை முதலீடு செய்வதற்கும் செப்டம்பர் 24ஆம் தேதி பிறகு நல்ல காலம் பிறக்கிறது. இந்த காலகட்டம் ராகு பகவானின் வழிபாடு செய்வதும் திருநாகேஸ்வரம் மற்றும் சந்திர பகவானை வழிபாடு செய்வதும் சிறப்பு பலனை பெற்றுக் கொடுக்கும்.

இந்த மாதம் முழுவதும் இவர்கள் தியானம் மற்றும் குடும்பத்துடன் அமைதியான நேரத்தை செலவிடுவதால் வீண் விவாதங்களையும் மனக்கஷ்டங்களையும் தவிர்க்கலாம். மேலும், மீன ராசியினருக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US