2026: துலாம் நவாம்சத்தில் குரு பெயர்ச்சி.. 12 ஆண்டுகள் கஷ்ட காலம் முடிவுக்கு வரப்போகிறது

By Sakthi Raj Jul 17, 2026 06:00 AM GMT
Report

 ஜோதிட சாஸ்திரப்படி பூச நட்சத்திரம் என்பது சனி பகவானுடைய ஆதிக்கத்தை பெற்றது. இது மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நட்சத்திரமாக கருதப்படுகிறது. மேலும், பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் என்பது துலாம் நவாம்சத்தில் சுக்கிரனுடைய வீட்டில் வருகிறது.

மேலும், குரு பகவானுடைய அறிவும் சனி பகவானுடைய ஒழுக்கம் மற்றும் சுக்கிர பகவானுடைய மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவை இணைந்து இந்த காலகட்டங்களில் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை வழங்கப்போகிறது.

அப்படியாக, இந்த குரு பெயர்ச்சியால் மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெறக்கூடிய முக்கியமான ராசிகள் யாரென்று பார்ப்போம்.

2026: துலாம் நவாம்சத்தில் குரு பெயர்ச்சி.. 12 ஆண்டுகள் கஷ்ட காலம் முடிவுக்கு வரப்போகிறது | 2026 Poosam Nakshtara Guru Peyarchi Prediction

முருகப்பெருமான் தமிழ் கடவுளா? இல்லையா? குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி இதோ

முருகப்பெருமான் தமிழ் கடவுளா? இல்லையா? குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி இதோ

கடகம்:

கடக ராசியில் தான் குரு பகவான் உச்சம் பெறுகிறார். தற்போது பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் அவர் நுழைவதால் இந்த காலகட்டம் இவர்களுக்கு மனதில் இருந்து குழப்பங்கள் விலகி நல்ல ஒரு தெளிவு பிறக்கும்.

நீண்ட நாட்கள் இவர்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மன குழப்பங்கள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்கு குரு பகவான் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் அமர்கிறார். பூச நட்சத்திர சஞ்சாரம் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக பல வழிகளில் லாபத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகிறது.

கூட்டு தொழிலில் இவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கான சாதகமான காலகட்டமாகும். இவர்களுக்கு சமூக வட்டம் விரிவடையும். முக்கிய புள்ளிகள் உடைய நட்புகள் இவர்களுக்கு இந்த காலகட்டம் கிடைக்கும்.

கர்கிடகம் மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது

கர்கிடகம் மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது

விருச்சிகம்;

விருச்சிக ராசிக்கு குரு பகவான் ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தில் அமர்கிறார். பூச நட்சத்திர மாற்றம் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்க போகிறது.

இவர்களுக்கு ஆன்மீக பயணங்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் என காலகட்டங்களில் வாய்ப்பு தேடி வரும். தந்தையை உடன் இருந்த அந்த கருத்து வேறுபாடுகள் விலகும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் உண்டாகும்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US