2026: ஆடி மாதம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது?
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகவே இருக்கப்போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்செய்தி வந்து சேரும். பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுடைய உறவுகள் மேம்படும். இருப்பினும் பயணங்களில் எச்சரிக்க வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் கலவையான பலன்களை கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
கடகம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் உடல் நலம் மற்றும் குடும்ப விஷயங்களை சற்று கவனத்தை செலுத்த வேண்டும். கோபம் அகங்காரத்தை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான காலகட்டம். இருப்பினும் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படலாம்.
கன்னி:
இவர்களுக்கு இந்த காலகட்டம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் வரப்போகிறது. பொருளாதாரத்தில் மிகச்சிறந்து விளங்குவீர்கள். வேலையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
துலாம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் குழந்தைகள் வழியாக நற்செய்திகள் வந்து சேர போகிறது. குருபகவானால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் காலமாகும்.
விருச்சிகம்:
தொழில் தொடர்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த மாதம் முடிந்தவரை இந்த வேலையிலும் ரிஸ்க் எடுத்து செய்வதை தவிர்ப்பது நல்லது.
தனுசு:
வேலை ரீதியாக முடிந்தவரை நீங்கள் இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தள்ளிப் போடுவது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
இவர்களுக்கு இந்த காலம் திருமண வாழ்க்கை தொடர்பான சவால்களை கொடுக்கலாம். உடல் நலம் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மிகவும் அனுகூலமான நன்மைகளை கொடுக்கப்போகிறது. அரசு வழியாக நன்மைகளை பெறப்போகிறீர்கள்.
மீனம்:
குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |