கர்கிடகம் மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது

By Sakthi Raj Jul 16, 2026 11:29 AM GMT
Report

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கர்கிடக மாத பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு மாதாந்திர பூஜைகளுக்காக ஜூலை 16 இன்று மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது.

இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கர்கிடக மாத பூஜைகளுடன் சேர்த்து நெய் அபிஷேகம், உஷா பூஜை, உச்ச பூஜை தீபாரதனை, மலர் அபிஷேகம் போன்ற வழக்கமான பூஜைகளும் நடைபெற உள்ளது.

கர்கிடகம் மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது | 2026 Sabarimala Today Temple Reopening

பெருமாள் பிரமசாரியாக அருள்பாலிப்பதால் பெண்களுக்கு அனுமதி இல்லை..எங்கு தெரியுமா

பெருமாள் பிரமசாரியாக அருள்பாலிப்பதால் பெண்களுக்கு அனுமதி இல்லை..எங்கு தெரியுமா

கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டதும் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். இதனை தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்களுக்கும் சிறப்பு பூஜைகளும், தரிசனமும் நடைபெற உள்ளது.

பிறகு ஜூலை 21 ஆம் தேதி இரவு ஹரிவராசனத்துடன் கோவில் நடை சாற்றப்படுகிறது, மாதாந்திர பூஜைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் சுவாமி தரிசனம் செய்து அருள் ஆசி பெறுவதற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US