2026: நவம்பர் 3 வரை.. தனுசு ராசிக்காரர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்
ஜோதிட ரீதியாக தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு முக்கியமான காலகட்டமாக இந்த நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை இருக்கிறது. இதற்கு நாம் பயப்பட வேண்டாம். இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது சில பிரச்சனைகளை தவிர்க்கும்.
அதாவது நவம்பர் 1 ஆம் தேதி சந்திர பகவான் விருச்சகத்திலும் செவ்வாயுடன் நெருக்கமாக உள்ளார். நவம்பர் இரண்டாம் தேதி சந்திரன் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். நவம்பர் 3 சந்திரன் தனுசு ராசியில் இருப்பார்.
ஜோதிட ரீதியாக சந்திரன் செவ்வாய் சேர்க்கை உணர்ச்சி வசப்படுதல், கோபம் ஆகியவற்றை உண்டாக்குகிறது.

ஆதலால், தனுசு ராசிக்காரர்கள் இந்த மூன்று நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேச்சே இவர்களுக்கு பிரச்சினையாக மாறலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் மிகவும் கவனமாக பேச வேண்டும்.
கணவன் மனைவி இடையே சிறிய விஷயம் கூட பெரிய அளவில் எதிர்பாராத சண்டையை வளர்த்து விடலாம். சொற்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடமும் தேவையில்லாத பிரச்சனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
அவர்கள் ஒன்று சொல்ல நீங்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடிய நிலைமை வரலாம். மேலும், தவறான வார்த்தைகள் நெருங்கியவர்களை மிகப்பெரிய அளவில் மனதை பாதிக்க கூடிய விஷயமாகவும் மாறலாம். இதனால் நீண்ட காலம் பேசாமல் போவதற்கான நிலை உருவாகலாம். கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |