2026 சனி ஜெயந்தி: சனி தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் செய்யவேண்டியவை என்ன?
சனிபகவான் அவதரித்த தினத்தினத்தை நாம் சனி ஜெயந்தி அல்லது சனீஸ்வரர் ஜெயந்தி என்று அழைக்கின்றோம். அந்த வகையில் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவன் பின்பற்றக்கூடிய ஒழுக்கம், அவருடைய கர்மா ஆகியவற்றுக்கு காரணமாக இருந்து அதற்கு தகுந்தாற்போர் பலனை வழங்க கூடியவர் சனி பகவான்.
வைகாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினத்தில் சனிபகவான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றது. அப்படியாக, கடுமையாக சனி தோஷம் உள்ளவர்கள் இந்த சனி ஜெயந்தி நாளில் குறிப்பிட்ட சில வழிபாடுகளை மேற்கொண்டால் அவர்கள் அந்த துன்பத்தில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

அந்த வகையில் மே 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்த சனி ஜெயந்தி வருகிறது. இந்த ஆண்டு பெருமாள் மற்றும் சனி பகவான் வழிபாட்டிற்குரிய சனிக்கிழமையில் இந்த சனி ஜெயந்தி வருவது கூடுதல் சிறப்பை பெறுகிறது.
இது மிகவும் அரிதான மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த தினமாக பார்க்கப்படுவதால் சனியால் ஏற்படுகின்ற தோஷத்திலிருந்து விடுபடவும் சனி பகவானுடைய முழு அருளை பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லவும் இன்று செய்ய வேண்டிய வழிபாடுகளை பற்றி பார்ப்போம்.
சனி ஜெயந்தி அன்று செய்ய வேண்டியவை:
பொதுவாக, சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்கின்ற ஒரு பழமொழி இருக்கிறது. சனிபகவான் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் எவ்வளவு பெரிய புயல் வந்தாலும் அவர் கொடுப்பதை தவிர்க்க முடியாது.
1. அப்படியாக, இவ்வளவு அற்புதமான ஆற்றல்களை கொண்ட சனி பகவானுடைய அருளை பெற சனி ஜெயந்தி அன்று காலை குளிப்பதற்கு முன்பாக தலை மற்றும் வயிற்று பகுதியில் நல்லெண்ணெய் வைத்து தேய்த்த பிறகு குளிக்கலாம்.
அதிலும் உச்சந்தலை மற்றும் தொப்புள் பகுதிகள் என்பது சமநிலை மற்றும் உயர் சக்தியின் மையமாக கருதப்படுவதால் அங்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்கும் பொழுது நமக்கு சனி தோஷத்தின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

2. அதேபோல், நம்முடைய உடலில் சனி கிரகத்திற்கு உரிய இடமாக நம்முடைய பாதம் இருக்கிறது. அதனால் ஒரு மரத்தட்டில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை எடுத்துக்கொண்டு அதன் மீது வெறும் காலுடன் பாதங்களை வைத்து அந்த உப்பில் படும்படி 10 நிமிடங்கள் அமைதியாக நிற்க வேண்டும்.
பிறகு அந்த உப்பை தண்ணீரை கரைத்து விடலாம். பிறகு பாதத்தில் சிறிது நல்லெண்ணெய் வைத்து கைகளால் தேய்த்து விட்டு பிறகு குளிக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சனி தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கும் உதவியாக இருக்க கூடிய பரிகாரம் ஆகும்.
3. அதைப்போல் முன் ஜென்மத்தில் நாம் செய்த தர்ம வினைகள் மற்றும் இந்த பிறவியில் தெரியாமல் பெற்றுக்கொண்ட கர்ம வினைகள் எல்லாம் நீங்க சனி ஜெயந்தி என்று கால பைரவரை வழிபாடு செய்யலாம். இந்த நாளில் கால பைரவர் அஷ்டகம் பாராயணம் செய்வது எழுதுவது நமக்கு நல்ல பலன் கொடுக்கும்.
3. சனி ஜெயந்தி அன்று சனிபகவானுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்தால் நல்ல பலன் அளிக்கும். அதே போல் ஏழை எளிய மக்கள் சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்து உதவிகள் செய்தாலும் நல்ல பலன்களை பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |