2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்: ஏழரை சனியில் இருந்து மீளுமா மீன ராசி?

By Sakthi Raj Mar 07, 2026 05:30 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மார்ச் 6ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்கிறது. அதாவது சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறினார். ஆதலால் மீன ராசி மிகப்பெரிய அளவில் ஒரு தாக்கத்தை சனிப்பெயர்ச்சி கொடுக்ககூடும். அப்படியாக சனிப்பெயர்ச்சி மீன ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது? என்று பார்ப்போம்.

மீன ராசிக்குஜென்ம சனி தொடங்குகிறது. அதனால், தேவை இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே உங்களுக்கு நன்மையை தரும். அலுவலகத்தில் முடிந்தவரை அமைதியை கையாளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிலும் பொறுப்பாகவும் கவனமாகவும் செயல்பட்டால் கட்டாயமாக பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.

2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்: ஏழரை சனியில் இருந்து மீளுமா மீன ராசி? | 2026 Sani Peyarchi Astrology Prediction For Pisces

சனிபகவான் தாக்கம் குறைய இந்த முறையில் பரிகாரம் செய்யுங்கள்

சனிபகவான் தாக்கம் குறைய இந்த முறையில் பரிகாரம் செய்யுங்கள்

 

ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதே சமயம் விரக்தி, வாழ்க்கையில் கஷ்டத்தை பற்றிய பலரிடம் புலம்புதல் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டங்களில் முடிந்தவரை யாரையும் எந்த நேரத்திலும் உதாசீனம் செய்யாதீர்கள்.

வீடுகளில் குடும்பத்தினரிடம் கடுமையான சொற்களைப் பயன்படுத்தாதீர்கள். அவ்வப்போது விட்டுக்கொடுத்து சென்றால் கட்டாயமாக ஒரு நல்ல சூழல் உண்டாகும். இந்த காலகட்டங்களில் கட்டாயமாக ஒரு சிலருக்கு சமுதாயத்தில் பெரிய பதவியில் இருக்கக்கூடியவர்களின் நட்புகள் கிடைக்கும்.

2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்: ஏழரை சனியில் இருந்து மீளுமா மீன ராசி? | 2026 Sani Peyarchi Astrology Prediction For Pisces

நட்சத்திரத்தை மாற்றும் கேது.. இந்த ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்

நட்சத்திரத்தை மாற்றும் கேது.. இந்த ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்

வீடு மற்றும் மனை புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். வேற்று மொழி பேசுபவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பணத்தை கையாளும் பொழுது சற்று கவனம் தேவை. ஒரு சிலருக்கு அடி வயிறு, உணவு குழாய், அல்சர் போன்ற உபாதைகள் இந்த காலகட்டங்களில் சந்திக்கலாம். மேற்கொண்டு எந்த ஒரு பிரச்சனைகளும் வராமல் இருப்பதற்கு நாமக்கல் வழிபாடு செய்தால் கட்டாயம் சனி பகவானின் கெடு பலன்கள் குறைந்து நன்மை உண்டாகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US