மேஷ ராசிக்கு தொடங்கும் ஏழரை சனி.. வாழ்க்கையில் மாற்றம் உண்டாகுமா?

By Sakthi Raj Feb 28, 2026 11:31 AM GMT
Report

மேஷ ராசிக்கு தொடங்கும் ஏழரை சனி.. வாழ்க்கையில் மாற்றம் உண்டாகுமா? வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. மார்ச் 6 அன்று காலை 8. 24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு செல்கிறார்.

இந்த பெயர்ச்சியால் மிகப்பெரிய அளவில் தனி நபர் வாழ்க்கையில் மாற்றம் உண்டாக்கும். அந்த வகையில் மேஷ ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது? அதாவது மேஷ ராசிக்கு ஏழரை சனி காலம் தொடங்கி இருக்கிறது. இவர்களுக்கு இதனால் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகுமா? என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷ ராசிக்கு தொடங்கும் ஏழரை சனி.. வாழ்க்கையில் மாற்றம் உண்டாகுமா? | 2026 Sani Peyarchi Palangal For Aries Zodiac

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

 சனி பகவான் மேஷ ராசிக்கு 10 மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய சனிபகவான் இப்போது 12ஆம் இடமான விரைய ஸ்தானத்திற்கு வருகிறார்.

சனி பகவானுடைய நட்பு வீடாக மீன ராசி இருப்பதோடு அங்கு குரு பார்வை இருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டங்களில் அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும் நீண்ட நாட்கள் தடைபட்ட வருமானம் வந்து சேரும்.

இழந்த பெருமைகள் குடும்ப பெயரை மீண்டும் அந்த காலகட்டங்களில் பெறுவீர்கள். ஆனால் ஒருவருக்கு வியாபார ரீதியாக அல்லது உறவு ரீதியாக வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும்.

மேஷ ராசிக்கு தொடங்கும் ஏழரை சனி.. வாழ்க்கையில் மாற்றம் உண்டாகுமா? | 2026 Sani Peyarchi Palangal For Aries Zodiac

2026 சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு திருமண யோகத்தை சனி கொடுப்பாராம்

2026 சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு திருமண யோகத்தை சனி கொடுப்பாராம்

இந்த காலகட்டங்களில் சுதந்திரமாக நீங்கள் சில முடிவுகளை எடுத்து முன்னோக்கி செல்வீர்கள். வாழ்க்கை துணைக்கு மதிப்பளிப்பீர்கள். அரசு மற்றும் அரசியல் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு புதிய பதவிகள் மற்றும் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கலை மற்றும் படைப்பு துறையில் இருப்பவர்களுக்கு அரசு வழியே நல்ல பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். தேவையில்லாத நட்புகளை இந்த காலகட்டங்களில் தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு நரம்பு மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகள் வரலாம் . ஒவ்வொரு நாளும் முடிந்த அளவு உடற்பயிற்சி செய்வது ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US