2026-ல் முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கவேண்டிய முக்கியமான நாட்கள்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உரிய முக்கியமான விரதங்களில் சஷ்டி விரதம் ஒன்று. பெரும்பாலான முருக பக்தர்கள் இந்த சஷ்டி விரதத்தை கட்டாயமாக கடைபிடித்து முருகப்பெருமானின் அருளை பெறுவார்கள்.
அப்படியாக மாதம் தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டிகளில் விரதம் இருப்பதற்கு மாத சஷ்டி விரதம் என்று ஒரு பெயர் உண்டு. இது தவிர ஐப்பசி மாதம் வளர்பிறையில் வருகின்ற சஷ்டிக்கு முன் வரும் 5 நாட்கள் மற்றும் சஷ்டி தினம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஆறு நாட்கள் இருக்கக்கூடிய சஷ்டி விரதத்தை மகாகந்த சஷ்டி விரதம் என்று சொல்வார்கள்.
இந்த மகா கந்த சஷ்டியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எப்பேர் பட்ட துன்பமும், எதிரிகள் தொல்லையும் விலகி வேண்டிய வரம் கிடைக்கும் என்பது முருகப்பெருமானின் பக்தர்களால் காலம் காலமாக நம்பக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.
அந்த வகையில் மகா கந்த சஷ்டி துவங்கி மாதந்தோறும் வருகின்ற அனைத்து சஷ்டி திதிகளிலும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் முருகன் அருளும் அவர்கள் வேண்டிய வரமும் நிச்சயம் நிறைவேறும்.
அப்படியாக, 2026 ஆம் ஆண்டு முருகப்பெருமானின் முழு அருளை பெற்று நம்முடைய வாழ்க்கை நலம் பெற சஷ்டி விரதத்தை கடைபிடிக்க வேண்டிய நாட்களின் முழு விவரங்களை பற்றி பார்ப்போம்.

| ஆங்கில தேதி | கிழமை | தமிழ் தேதி |
ஜனவரி 09, ஜனவரி 24 | வெள்ளி, சனி | மார்கழி 25, தை 10 |
பிப்ரவரி 07, பிப்ரவரி 22 | சனி, ஞாயிறு | தை 24, மாசி 10 |
மார்ச் 09 , மார்ச் 24 | திங்கள், செவ்வாய் | மாசி 25, பங்குனி 10 |
ஏப்ரல் 08, ஏப்ரல் 22 | புதன், புதன் | பங்குனி 25, சித்திரை 09 |
மே 07, மே 22 | வியாழன், வெள்ளி | சித்திரை 24, வைகாசி 08 |
ஜூன் 06, ஜூன் 20 | சனி, சனி | வைகாசி 23, ஆனி 06 |
ஜூலை 06, ஜூலை 19 | திங்கள், ஞாயிறு | ஆனி 22, ஆடி 03 |
ஆகஸ்ட் 04, ஆகஸ்ட் 18 | செவ்வாய், செவ்வாய் | ஆடி 19, ஆவணி 01 |
செப்டம்பர் 02, செப்டம்பர் 17 | புதன், வியாழன் | ஆவணி 16, ஆவணி 31 |
அக்டோபர் 02, அக்டோபர் 16, அக்டோபர் 31 | வெள்ளி, வெள்ளி, சனி | புரட்டாசி 15, புரட்டாசி 29, ஐப்பசி 14 |
நவம்பர் 15, நவம்பர் 29 | ஞாயிறு, ஞாயிறு | ஐப்பசி 29, கார்த்திகை 13 |
டிசம்பர் 15, டிசம்பர் 29 | செவ்வாய், செவ்வாய் | கார்த்திகை 29, மார்கழி 14 |
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |