30 நிமிடத்தில் நெகட்டிவ் எனர்ஜியை அடியோடு விரட்டும் உப்பு பரிகாரம்
நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்ககூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபட நிறைய பரிகாரங்கள் இருக்கிறது. ஆனால் அந்த பரிகாரங்களை நாம் சரியான முறைகளில் சரியான நேரத்தில் செய்தால் மட்டுமே அந்த பரிகாரம் செய்த முழு பலன் நமக்கு கிடைக்கும்.
அப்படியாக நம்முடைய வீடுகளில் சூழ்ந்து இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் மற்றும் கண் திருஷ்டி விலகநாம் நிறைய பரிகாரங்கள் மற்றும் ஆன்மீக குறிப்புகளை பின்பற்றுவோம்.
அந்த வகையில் நாம் அனைவரும் தெரிந்த மற்றும் காலம் காலமாக பின்பற்றக்கூடிய ஒரு விஷயம் கல் உப்பை கொண்டு செய்யக்கூடிய பரிகாரம்.
கல் உப்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்ததும் நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய நெகட்டிவ் எனர்ஜிகளை அடியோடு விரட்டக்கூடிய தன்மை கொண்டதாக பல நூறு ஆண்டுகளாக நம் முன்னோர்கள் நம்பக்கூடிய விஷயம்.

இதனால் பலரும் கல் உப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு அதை குளிக்கும் இடங்களிலும் அல்லது வீடுகளில் மூலைகளிலும் வைப்பது உண்டு. இவ்வாறு வைக்கும் பொழுது வீடுகளில் உள்ள கெட்ட சக்திகளை உடனடியாக அவை அகற்றுவதாக நம்பப்படுகிறது.
அந்த வகையில் இந்த பரிகாரத்தை நாம் எவ்வாறு சரியாக செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு கிண்ணத்தில் கல் உப்பை போட்டு செய்யக்கூடிய இந்த பரிகாரமானது உடனடி பலன் கொடுக்கும். ஆனால் அவை 30 நிமிடத்திற்கும் மேலாக ஒரு இடத்தில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்கும் பொழுது நிச்சயமாக நமக்கு ஒரு தீய ஆற்றலை பெற்றுக் கொடுத்து விடுகிறது.
அது மட்டுமல்லாமல் சிலர் ஒரு வாரம் ஒரு மாத காலமாக அதை வைத்து இடத்திலே வைத்து விடுகிறார்கள். இதுவும் ஒரு தீய ஆற்றலை தான் உருவாக்குகிறது. அதனால் வீடுகளில் இருக்கக்கூடிய நெகட்டிவ் எனர்ஜிகளை நீங்கள் சுத்தம் செய்து ஒரு நல்ல அதிர்வலைகளை நீங்கள் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று எண்ணினால் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை போட்டு குளிக்கும் இடம், கழிவறை அல்லது வீட்டின் மூலைகளில் 30 நிமிடம் மட்டும் வைத்து விடுங்கள்.

30 நிமிடம் கழித்த பிறகு அந்த உப்பை நீங்கள் அகற்றி விட வேண்டும். அந்த கல் உப்பை வைத்து கிண்ணத்தையும் சுத்தமாக கழுவி விட்டு அடுத்த சுற்றுக்கு அதை பயன்படுத்த தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பரிகாரங்களுக்கு நிச்சயமாக பழைய உப்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம். அல்லது நீங்கள் எப்பொழுது எல்லாம் வீடுகளில் ஏதேனும் சூழ்நிலை சரி இல்லை என்று தோன்றுகிறதோ அப்பொழுது இதை செய்யலாம். உடனடி மாற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |