2026: அக்டோபர் மாதம் கடன் தொல்லையிலிருந்து விடுபடும் விருச்சிக ராசியினர்
2026 ஆம் ஆண்டு விருச்சிக ராசியினர் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் கிரக நிலையால் நிகழப் போகிறது என்பதை பற்றி பார்ப்போம். இவர்களுக்கு செவ்வாய் நீச பங்க ராஜயோகம் பெறுவதால் இந்த மாதம் முழுவதும் அவர்களுடைய கடனை அடைப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
இருப்பினும் இந்த மாதம் அவர்கள் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மேலும், அக்டோபர் 21ஆம் தேதி முதல் குரு பகவான் பத்தாம் இடத்திற்கு அதிசாரமாக நகர்வதால் இவர்கள் வேலையில் இருக்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உயர் அதிகாரிகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து நல்லது இவர்களுடைய வேலைக்கு நன்மையை தரும். கணவன் மனைவி இடையே ஒரு நெருக்கமான நிலை உருவாகும். இருப்பினும் சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது.
இந்த காலகட்டங்களில் இவர்கள் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் கேட்பதும் நல்லது. இவர்கள் சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய ஞாயிறு மற்றும் சூரியனார் கோவிலுக்கு சென்று வருவதும் சிறப்பு.
விஷ்ணு பகவானை வழிபாடு செய்யலாம் விஷ்ணு சகஸ்ரநாமம் இவர்கள் புரட்டாசி மாதம் முடியும் வரை பாராயணம் செய்வது நல்ல பலன்கள் கொடுக்கும்.
இவர்கள் அக்டோபர் 3, 4 மற்றும் 30 தேதிகளில் சந்திராஷ்டமிருப்பதால் அந்த நாட்களில் எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பேசுவதிலும் ஒருவரிடம் பழகுவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மேலும்,விருச்சிக ராசியினர் அக்டோபர் மாதம் பலனை இந்த காணொளியில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |