செப்டம்பர் 1 முதல் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. முழு விவரங்கள் இதோ

By Sakthi Raj Aug 09, 2026 09:12 AM GMT
Report

தமிழகத்தில் தற்பொழுது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. அந்த வகையில், தற்பொழுது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் முதல் நிலை கோயில்களுக்குள் வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையின் பிரபலங்கள் அமைச்சர்கள் கோயில்களுக்குள் வரும் பொழுது வீடியோ எடுப்பதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செப்டம்பர் 1 முதல் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. முழு விவரங்கள் இதோ | 2026 Sept 1 No Mobiles Allowed In Temple Tamilnadu

2026: ஆடி அமாவாசை எப்பொழுது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?

2026: ஆடி அமாவாசை எப்பொழுது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்கள் ஒன்றான ஸ்ரீ தாமோதரகிருஷ்ண கோபுரம் பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு சூழல் காரணமாக தாமதம் ஏற்பட்டு உள்ள நிலையில், தற்போது நடந்து வருகின்ற ஆட்சியில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் ரமேஷ் கோயில் சொத்துக்களாக இருந்தாலும், கோயிலுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்களாக இருந்தாலும் அது காப்பாற்றப்படும் என்றும் கைவிடப்படாது என்று அவர் சொல்லியிருக்கிறார்.

மேலும், திருக்கோவில்களில் செல்போன்கள் அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் கருவறை உள்ள பல வீடியோக்கள் வருவதை பார்க்கிறோம். கடந்த ஆட்சியில் அதனை சரிவர செயல்படுத்தவில்லை.

செப்டம்பர் 1 முதல் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. முழு விவரங்கள் இதோ | 2026 Sept 1 No Mobiles Allowed In Temple Tamilnadu

இந்த ராசிகளுக்கு பணம் வந்தாலே கையில் தாங்காதாம்.. எந்த ராசியினர் தெரியுமா?

இந்த ராசிகளுக்கு பணம் வந்தாலே கையில் தாங்காதாம்.. எந்த ராசியினர் தெரியுமா?

 

அதனால், முதல் நிலை திருக்கோயில்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து செல்போன் கவுண்டர்கள் வைத்து பாதுகாப்பான முறையில் செல்போன்களை பாதுகாக்க முக்கிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொல்லியிருக்கிறார்.

அதேபோல், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் வரும்பொழுது கோவிலுக்கு வெளியே பேட்டி மற்றும் வீடியோ எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் தரிசனத்திற்கு செல்வதை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கை எடுத்து கும்பிட்டு அவர் வேண்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US