தை அமாவாசை எப்பொழுது? பித்ரு தோஷம் விலக கட்டாயம் இதை செய்யுங்கள்
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை தினமானது மிகவும் விசேஷம் என்றாலும் தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. அப்படியாக, இந்த 2026 ஆம் ஆண்டு தை அமாவாசை வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி அன்று வருகிறது.
அன்றைய நாளில் குறிப்பிட்ட சில பரிகாரங்கள் செய்தால் நமக்கு முன்னோர்களுடைய ஆசிர்வாதம் கிடைப்பதோடு பித்ரு தோஷம் யாவும் விலகும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே, இந்த அமாவாசை தினங்களில் நாம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும் என்று நமக்கு வலியுறுத்துவதற்கான முக்கிய காரணம் நம்முடைய முன்னோர்களை நாம் எந்த நிலையிலும் மறவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

ஆதலால், அவர்களை மறவாமல் அவர்களுக்கு எப்பொழுதும் அவர்களுக்குரிய மரியாதை கடமைகளை செய்து அவர்களின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த அமாவாசை போன்ற நாட்களில் நாம் அவர்களை வழிபாடு செய்கின்றோம்.
இதில் சிலர் வெளியூர் அல்லது வெளிநாடுகள் சென்ற பிறகு அவர்களுடைய முன்னோர்களை மறந்து இருக்கக்கூடிய நிலை வருகிறது. ஆதலால், முன்னோர்களுக்கு செய்யக்கூடிய பித்ரு கடமைகளை செய்ய தவறுவதால் பித்ரு தோஷத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். அவ்வாறு பித்ரு தோஷம் உள்ளவர்கள் அந்த தோஷம் விலக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு தை அமாவாசை வருகின்ற 18ஆம் தேதி வர இருக்கின்ற நேரத்தில் குடும்பத்தில் இருக்கக்கூடிய மூத்த மகன் முன்னோர்களின் பெயரில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் மனம் மகிழ்ச்சியடைந்து உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார்கள்.
அதோடு பித்ரு தோஷம் இருந்தால் அவை விலகும். இந்த நாளில் முன்னோர்களின் பெயரில் கருப்பு எள்ளுடன் ஹோமம் செய்தால் நல்ல பலன் கிடைப்பதோடு முன்னோர்களுடைய ஆன்மா ஆனது சாந்தி அடையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |