2026: இன்று ஆடி பெளர்ணமி அன்று மறந்தும் செய்யக்கூடாத 7 தவறுகள்..
ஆடி மாதம் முழுவதும் மிகவும் சக்தி வாய்ந்த மாதம் என்றாலும் ஆடி மாதத்தில் மிகவும் முக்கியமான நாட்களில் ஆடிப் பௌர்ணமியும் ஒன்று. இந்த நாளில் தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்த இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதோடு, ஆடி பௌர்ணமி அன்று சந்திர பகவான் தன்னுடைய முழு ஆற்றலுடன் இருக்கக்கூடிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் அம்மனை மனதார வழிபாடு செய்வதும் பூஜைகள் செய்வதும் மிகச்சிறப்பு.
மேலும், ஆடி பௌர்ணமி அன்று சிவபெருமானையும் அம்பிகையையும் பெருமாளையும் மனதார வழிபாடு செய்வது நமக்கு வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும், கர்ம வினைகளும், எதிரிகளால் ஏற்படுகின்ற தொல்லைகளும், கடன் நெருக்கடிகளும் குறையும்.
அதைப்போல், ஆடி பௌர்ணமி அன்று குறிப்பிட்ட சில தவறுகளை மட்டும் தெரியாமலும் செய்து விடக்கூடாது என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

ஆடி பெளர்ணமி அன்று செய்யக் கூடாத தவறுகள் :
ஆடி பௌர்ணமி தினத்தன்று மாலை நேரங்களில் குறிப்பாக அரிசி, உப்பு, பணம் பருப்பு போன்றவற்றை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது. அதேபோல் ஆடிப் பௌர்ணமி அன்று கட்டாயமாக வீடுகளில் இருந்து நாம் விளக்கேற்றி வழிபாடு செய்வதாக அவசியம். மாலை நேரங்களில் தூங்குவதை தவிர்த்து விட வேண்டும்.
ஆடி பௌர்ணமி அன்று தவறியும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த நாளில் முடி, நகம், வெட்டுதல், கடன் கொடுப்பது வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல், இந்த நாளில் யாரிடமும் வீணாக சண்டையிடுவதோ கோபப்படுவதோ அல்லது தீய வார்த்தைகள் பயன்படுத்துவதையும் தவிர்த்து விட வேண்டும்.

ஆடி பெளர்ணமியில் செய்ய வேண்டியவை :
ஆடி பௌர்ணமி தினத்தன்று தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்திருப்பதால் இந்த நாளில் மாலை நேரங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்வதும் வீட்டின் வாசலுக்கு அருகில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதும் மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.
இந்த நாளில் அம்பிகை மந்திரங்களை பாராயணம் செய்வதும், அபிராமி அந்தாதி படிப்பதும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கும். அதே போல் வீடுகளில் திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு குங்குமம், அர்ச்சனை ஆகியவை செய்து வழிபாடலாம். இதனால் வீட்டில் மகாலட்சுமியின் உடைய பரிபூரண அருள் கிடைக்கும்.
ஆடி பௌர்ணமி தினத்தன்று கங்கை, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது மிகப்பெரிய அளவில் நல்ல பலன்களை பெறலாம். இந்த நாளில் அன்னதானம் செய்தால் கர்ம வினைகள் விலகும். இந்த நாளில் சந்திர பகவானை மனதார வழிபாடு செய்கின்ற பொழுது மனதில் தெளிவும் செல்வமும் உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |