2026 : உலகில் மிக உயரமான நவராத்திரி கொலு.. எங்கு தெரியுமா?
இந்து மத பண்டிகைகளில் நவராத்திரி பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாடக்கூடிய ஒன்பது நாள் பண்டிகையாகும். அந்த வகையில் 9 நாட்களும் அம்பிகையை வழிபாடு செய்து விரதம் இருந்து அம்பிகையின் அருள் பெறக்கூடிய ஒரு அற்புத காலகட்டம்.
அந்த வகையில், ஒவ்வொரு வீடுகளிலும் அவர்களுடைய வசதிக்கேற்ப நவராத்திரி கொண்டாடுவார்கள். ஒரு சிலர் வீடுகளில் கொலு அமைத்துக் கொண்டாடுவார்கள். அப்படியாக உலகின் மிக உயரமான கொலு அமைப்பை பற்றி பார்ப்போம்.
சென்னையில் எஸ்பிஆர் சிட்டியில் அமைந்திருக்கிறது உலகின் மிக உயரமான கொலு. இந்த கொலு சுமார் 48.1 அடி உயரம் கொண்டது. இது உலக சாதனையாகவே கருதப்படுகிறது. இந்த கொலுவில் இருக்கக்கூடிய பொம்மைகளின் தேர்வு மிகவும் தனித்துவமானது.
எல்லோரையும் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த கொலுவை காண்பதற்கு தமிழ்நாடு மட்டுமல்ல பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் வருகை தருகிறார்கள். மேலும், இந்த கொலுவின் உடைய சிறப்புகள் கண்காட்சிகளை பற்றி இந்த காணொளியை பார்த்து தெரிவித்துக் கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |