2027-ல் இயற்கை சீற்றத்தால் வர இருக்கும் ஆபத்து.. பஞ்சாங்கம் சொல்வது என்ன?
பிரபல ஜோதிடர் பாலாறு சுவாமிகள் அவர்கள் தமிழ் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளை பற்றி பகிர்ந்து கொள்கிறார். அதை பார்ப்போம்.
அவர் கணிப்பின்படி சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கடுமையான வெள்ள அபாயம் ஏற்படலாம் என்று பஞ்சாங்கம் எச்சரிப்பதாகவும் மக்கள் மற்றும் அரசு இதற்கு முன்னதாகவே ஒரு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டால் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம் என்று அவர் சொல்லுகிறார்.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது விலை உயர்வு உணவு தட்டுப்பாடு மற்றும் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
மேலும், நாடுகளில் புது வகையான விஷக்காய்ச்சல் பரவலாம் என்றும் சீனா நேபாளம் வங்கதேசம் போன்ற நாடுகளில் இயற்கை சீற்றங்களால் பெரிய பாதிப்பு வரலாம் என்றும் அவர் சொல்கிறார்.
அதோடு, பஞ்சாங்கம் என்பது மக்களை எப்பொழுது அச்சமூட்டுவதற்காக அல்ல, இவை நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி நன்கு புரிந்து திட்டமிட்டு தைரியமாகவும் அதற்கான வழிவகைகளையும் ஏற்பாடு செய்து கொள்ளக்கூடிய ஒரு வழிகாட்டியாகவே அமைகிறது என்று சொல்கிறார்.
மேலும், பஞ்சாங்கம் அடிப்படையில் பல முக்கியமான விஷயங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |