அதிர்ஷ்டம் பெற 12 நட்சத்திரக்காரர்களும் வழிபாடு செய்ய வேண்டிய பைரவர் ஆலயங்கள்
27 நட்சத்திரக்காரர்களும் ஒவ்வொரு கோவில் ஒரு முக்கியமான கோவிலாகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகவும் இருக்கிறது.
அந்த வகையில், நினைத்ததை நடத்திக் கொடுக்கக்கூடிய மற்றும் அதிர்ஷ்டத்தை பாதுகாப்பை வழங்க கூடிய பைரவரை வழிபாடு செய்கின்ற பொழுது ஒவ்வொரு வாழ்விலும் ஏற்றத்தை காணலாம். இருப்பினும் 12 ராசிகளுக்கும் தனித்துவமான பைரவர் வழிபாடு இருக்கிறது.
அவர்கள் அந்த ஆலயத்திற்கு சென்று அந்த பைரவரை வழிபாடு செய்கின்ற பொழுது வெகு விரைவில் அவர்கள் நினைத்ததை அடையக்கூடிய பாக்கியம் கிடைக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

அசுவினி –சரஸ்வதி – ஞான பைரவர் – பேரூர்.
பரணி –துர்க்கை – மஹா பைரவர் –பெரிச்சியூர்.
கார்த்திகை – அக்கினி – அண்ணாமலை பைரவர் – திருவண்ணாமலை.
ரோகிணி – பிரம்மன் – பிரம்மசிரகண்டீஸ்வரர் – திருகண்டியூர்.
மிருகசீரிஷம் – சந்திரன் – க்ஷேத்திரபால பைரவர் – ஷேத்ரபாலபுரம்.
திருவாதிரை – சிவன் – விடுக பைரவர் – வடுகூர்.
புனர்பூசம் – அதிதி – விஜய பைரவர் – பழனி.
பூசம் – பிரஹஸ்பதி – ஆஸின பைரவர் – ஸ்ரீ வாஞ்சியம்.
ஆயில்யம் – ஆதிசேஷன் – பாதாள பைரவர் – காளஹஸ்தி.
மகம் – சுக்கிரன் – நர்த்தன பைரவர் – வேலூர்.
பூரம் – பார்வதி – பைரவர் – பட்டீஸ்வரம்.
உத்திரம் – சூரியன் – ஜடாமண்டல பைரவர் – சேரன்மகாதேவி.
அஸ்தம் – சாஸ்தா – யோகாசன பைரவர் – திருப்பத்தூர்.
சித்திரை – விஸ்வகர்மா – சக்கர பைரவர் – தர்மபுரி.
சுவாதி – வாயு ஜடாமுனி – பைரவர் – பொற்பனைக்கோட்டை.
விசாகம் – முருகன் – கோட்டை பைரவர் – திருமயம்.
அனுஷம் – லக்ஷ்மி – சொர்ண பைரவர் – சிதம்பரம்.
கேட்டை – இந்திரன் – கதாயுத பைரவர் – சூரக்குடி.
மூலம்– அசுரர் – சட்டைநாதர் – சீர்காழி.

பூராடம் – வருணன் – வீர பைரவர் – அவிநாசி , ஒழுகமங்கலம்.
உத்திராடம் – கணபதி – முத்தலைவேல்வடுவர் – கரூர்.
திருவோணம் – விஷ்ணு – மாரிதாண்ட பைரவர் – வயிரவன்பட்டி.
அவிட்டம் – வசுக்கள் – பலிபீட மூர்த்தி – சீர்காழி ஆறுகமூர். (அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம் )
சதயம் – யமன் – சர்ப்ப பைரவர் – சங்கரன்கோவில்.
பூரட்டாதி – குபேரன் – அஷ்டபுஜ பைரவர் – கொக்கரையான்கோட்டை, தஞ்சாவூர்.
உத்திரட்டாதி – காமதேனு – வெண்கல ஓசை பைரவர் – சேஞ்ஞலூர்.
ரேவதி – சனி – சம்ஹார பைரவர் – தாத்தையங்கார்பேட்டை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |