புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் கிடைக்கும் 3 பலன்கள் பற்றி தெரியுமா?
சனிக்கிழமை என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது பெருமாள் வழிபாடுதான். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் பெருமாளை வழிபடுவது நமக்கு பலவகையான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கும்.
அந்த வகையில், புரட்டாசி மாதம் என்பது பெருமாள் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதம். இந்த மாதத்தில் நாம் எந்த சுப காரியங்களும் செய்வதில்லை. பெருமாளை மட்டுமே நினைத்து விரதம் இருந்து நாம் வழிபாடு செய்கின்றோம்.
அந்த வகையில். இன்று 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் புரட்டாசி சனிக்கிழமை வருகிறது. இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நமக்கு கிடைக்கும் 3 பலன்களை பற்றி பார்ப்போம்.

1. செல்வ வளம்:
சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை மனதார வழிபாடு செய்கின்ற பொழுது குடும்பத்தில் வறுமை நீங்கி நல்ல பொருளாதாரமும் முன்னேற்றமும் கிடைக்கிறது. செல்வம் என்பது பணம் மட்டுமல்ல, உயர்ந்த செல்வம் என்பது நிம்மதியும் பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் நமக்கு பெருமாளின் அருளால் கிடைக்கிறது.
2. ஆயுள் மற்றும் ஆரோக்கியம்:
ஒருவர் மிகுந்த பக்தையுடன் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்கின்ற பொழுது அவர்களுடைய ஆயுள் நீடிப்பதாகவும் ஆரோக்கியம் நலம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

3. துன்பங்களிலிருந்து விடுதலை பெற:
சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்து தீபம் ஏற்றி மந்திரங்களை பாராயணம் செய்கின்ற பொழுது நமக்கு வாழ்க்கையில் சிந்திக்கக்கூடிய சங்கடங்கள், எதிரிகள் தொல்லை போன்ற எல்லா பிரச்சனைகளிலும் இருந்து விடுதலை கிடைக்கிறது.
அது மட்டும் இல்லாமல் சனிக்கிழமை பெருமாளின் வழிபாடு செய்வதால் நமக்கு சனி பகவானுடைய தோஷமும் நீங்குகிறது. சனிபகவானால் நமக்கு நடக்கக்கூடிய கடுமையான பாதிப்புகள் குறைத்து நல்ல காலம் பிறக்க செய்கிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |