செல்வத்திற்கு அதிபதியான குபேரர் அருளை பெற்று கொடுக்கும் 3 அதிர்ஷ்ட ஆலயங்கள்
ஒரு மனிதனுக்கு கட்டாயமாக நல்ல செல்வ வளம் அவசியம். அப்பொழுதுதான் அவன் நன்றாக வாழ்க்கையில் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும். அப்படியாக, செல்வத்திற்கு அதிபதியாக விளங்க கூடியவர் குபேர பகவான்.
இவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள், இழந்த செல்வம், சொத்து இதையெல்லாம் மீட்டு விடலாம். அப்படியாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான குபேரர் ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

1. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்:
குபேரன் அவர் செய்த தவறுகளை மன்னித்து அருளும்படி திருக்கோளூர் பெருமாளை கடுமையாக தவம் செய்து பிறகு பெருமாள் அவரை மன்னித்து நவ நதிகளை தந்தருளிய இடமாகும்.
அதனால்தான், இந்த கோயிலுக்கு வறுமையில் வாடுபவர்களும், இழந்து செல்வத்தை மீட்டெடுக்கவும் பக்தர்கள் வைத்தமாநிதி பெருமாளை வழிபாடு செய்து சகல ஐஸ்வர்யங்களையும் பெறுகின்றனர். இங்கு உள்ள தீர்த்தம் குபேர தீர்த்தம் ஆகும்.
2. திருவண்ணாமலை குபேர லிங்கம்:
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பொழுது குபேர லிங்கத்தை நாம் தரிசனம் செய்யலாம். ஏழாவது லிங்கமாக விளங்ககூடிய இந்த லிங்கம் குபேரனால் வழிபாடு வழிபடப்பட்ட லிங்கமாகும். இந்த குபேர லிங்கத்தை வழிபாடு செய்யும் பொழுது பொருளாதாரத்தில் நாம் சிறந்து விளங்கலாம்.

3. 12 ராசிகளுக்கும் 12 குபேரர்கள் அருளும் செட்டிகுளம்:
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். பொதுவாக, ஆலயங்களில் குபேரரின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் குபேரனை நாம் வித்யாசமான வடிவில் தரிசனம் செய்யலாம்.
குபேரர் இங்கு கல் தூண்கள், கோபுர முகப்பு என பல மொத்தம் 12 இடங்களில் குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது 12 ராசிகளுக்கும் குபேரர் அருள் வழங்குவதாக சொல்லப்படுகிறது.
அதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்கு உரிய குபேரரை வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் சந்திக்கும் பொருளாதார கஷ்டங்கள், வறுமை நீங்கி செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதோடு இங்கு 12 குபேரர் தவிர்த்து மகா குபேரனின் சிற்பம் ஒன்று ஆலய கோபுரத்தில் உட்புறம் வடக்கு திசையில் அமைந்து இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |