தீபாவளி அன்று இந்த 3 தவறுகளை மட்டும் கட்டாயம் செய்து விடாதீர்கள்
இந்து மதத்தில் கொண்டாட கூடிய முக்கியமான பண்டிகைகளின் தீபாவளி திருநாள் மிகவும் விசேஷமானது. இந்த நாளில் எல்லோரும் குடும்பமாக ஒன்றிணைந்து பலகாரம், புத்தாடை அணிந்து வெடித்து சிறப்பாக கொண்டாட கூடிய ஒரு அற்புதமான நாளாக இருக்கும்.
அந்த வகையில், செல்வ வளத்தையும் மங்களத்தையும் வழங்கக் கூடிய தீபாவளி திருநாள் அன்று குறிப்பிட்ட சில 3 தவறுகளை கண்டிப்பாக செய்து விடக்கூடாது என்று சொல்கிறார்கள். இதனால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்று சொல்வதால் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதை பற்றி பார்க்கலாம்.

தீபாவளியை ஏன் கொண்டாட வேண்டும்?
பொதுவாகவே, தீபாவளி என்பது நம்முடைய வீடுகளிலும் வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய அறியாமை துன்பம் இருள் ஆகியவைப் பழகி நன்மைகள் மகிழ்ச்சியை வளர்ச்சி செல்வ வளம் ஆகியவற்றை அருளக்கூடிய ஒரு சிறப்பான பாண்டியாக கருதப்படுகிறது. இவை ஆன்மீக ரீதியாகவும் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
உயிர்களைக் காக்கக்கூடிய தெய்வமாக இருக்கும் மகாவிஷ்ணுவையும் அனைத்து விதமான நன்மைகளையும் அருளக்கூடிய லட்சுமி தேவியின் அருளையும் பெறுவதற்கு மிகவும் சக்தி வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.
இந்த நாளில் செய்யக்கூடிய தான தர்மங்கள், பூஜைகள் மிகப்பெரிய அளவில் நன்மைகளையும் புண்ணியங்களையும் பெற்றுக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
[
தீபாவளி அன்று செய்யக் கூடாத 4 தவறுகள் :
1. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தீபாவளி திருநாள் என்று நிச்சயமாக வீட்டை இருளாக வைத்திருக்கக் கூடாது. தீபாவளி என்று சொல்லுக்கு தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாட கூடிய திருநாள் என்பது பொருளாகும்.
இந்துக்களின் சாஸ்திரத்தின் படி தீபம் என்பது மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகிறது. தீபச்சூடர் என்பது முப்பெரும் தேவியர்களின் ஒன்றான ஜோதி வடிவமாக கருதப்படுகிறது. ஆதலால், தீபாவளி திருநாள் அன்று வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். இருள் சூழ்ந்தப்படி இருக்கக்கூடாது.
2. தீபாவளி திருநாள் அன்று லட்சுமி தேவி ஒவ்வொரு குடும்பத்தினரும் வீட்டிலும் எழுந்தருளி ஆசீர்வாதம் வழங்குவதாக ஐதீகம். அதனால் வீடுகளில் அந்த தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்யாமல் இருக்கக்கூடாது.
3. தீபாவளி திருநாள் அன்று சண்டையிடுவதோ யாரையாவது உதாசீனப்படுத்துவதோ ஆணவம் அகங்காரம் கொள்வது கூடாது. அதேபோல் இந்த தினத்தில் அழ வைப்பது போன்ற நிகழ்வையும் கட்டாயமாக செய்யக்கூடாது.

தீபாவளி அன்று செய்ய வேண்டியவை :
தீபாவளி திருநாள் அன்று பாவங்கள் விலகி புண்ணியங்கள் சேர கங்காதேவியை வழிபட்டு அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்வது நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும்.
இந்த நாளில் சூரிய பகவானை வழிபடுவதும் அவருடைய அருளை பெறுவதற்கும் ஒரு மிக சிறந்த நாளாக இருப்பதால் சூரிய பகவானை வழிபாடு செய்யும்பொழுது ஆரோக்கியமும் வளர்ச்சியும் உண்டாகும்.
லட்சுமி தேவியை கட்டாயமாக மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதனால் நல்ல செல்வ வளம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |